*தவ்ஹீத் ஜமாஅத் அறிவுக்கு பொருந்தவில்லை என்று ஹதீஸ்களை மறுக்கின்றதா*

அறிவுக்கு முன்னுரிமை கொடுத்து தான் ஹதீஸ்களை மறுக்கிறோம் என்று ஒரு விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

இதுவும் அடிப்படையற்ற விமர்சனம் தான்.

*அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்கத் தான் வேண்டும் அதைத்தான் மார்க்கமும் வலியுறுத்துகிறது*.

*மறுமை, மலக்குமார்கள், தூதர்கள்,ஜின்கள், சொர்க்கம், நரகம்* இது போன்ற காரியங்களைப் பற்றி அறிவைக் கொண்டா நம்புகிறோம்?

*அல்லாஹ் சொல்லி விட்டான், நம்பி விட்டோம்.*

நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எதற்கும் நாம் அறிவைப் பயன்படுத்தி கேள்வியெழுப்புவதோ மறுப்பதோ கிடையாது.

அதே சமயம், *நடைமுறையில் நாம் காணக்கூடிய விஷயங்கள், உலக விஷயங்கள், பார்த்தோ, கேட்டோ, உணர்ந்தோ நிரூபணமாகக் கூடிய விஷயங்களைப் பொறுத்தவரை அறிவை தான் பயன்படுத்த வேண்டும்.*

*அஜ்வாவுக்கு இந்த அற்புதத் தன்மை இருக்கிறது என்று சொன்னால், இது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல.*

இது உலகக் காரியம். நடைமுறையில் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்கிற விஷயம். அப்படிப்பட்டவற்றை பரிசோதித்து தான் நம்ப முடியும்.

கத்திரிக்காய் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அப்படியானால், கத்திரிக்காய் என்பது இன்றைக்கும் கிடைக்கின்ற ஒரு பொருள். ஒரு பொருளுக்கு இன்ன அற்புதம் இருக்கிறது என்று *இஸ்லாத்தின் பெயரால் சொன்னால் அதை எப்படி வெறுமனே நம்பிக்கை சார்ந்த விஷயமாக எடுப்பது?*

அதை ஒரு காஃபிர் எப்படி அணுகுவார்?

கத்திரிக்காயில் இன்ன குணம் இருக்கிறது என்கிறாய். பரிசோதித்தால் அது இல்லை, அப்போது இஸ்லாமே பொய் என்று அவன் கருத மாட்டானா?

அதே சமயம், *நரகம் அல்லாஹ்விடம் பேசியது* என்று ஒரு ஹதிஸில் வருவதைப் பற்றி நாம் சொல்கிறோம்.

*இது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல.*

*நரகம் என்பது மறைவானது.*

படைத்த இறைவன் சொல்லி விட்டான், அதனால் அதை நம்புகிறோம்.

அதே இறைவன், அந்த நரகம் பேசும் என்கிறான், அப்படியானால் அது பேசும், *அல்லாஹ் நாடினால் எதையும் செய்வான்.*

இப்படி புரிவது தான் சரியானதே தவிர, அறிவையே பயன்படுத்தமல் முட்டாளாக இருக்கவா இஸ்லாம் சொல்கிறது?

*சிந்தியுங்கள், சிந்தியுங்கள், ஏன் சிந்திக்காமல் இருக்கிறீர்கள்?,உங்கள் மூளையில் பூட்டா போடப்பட்டிருக்கிறது?*

என்றெல்லாம் அல்லாஹ் குர் ஆனில் பல இடங்களில் சொல்கிறானே, அவையெல்லாம் எதற்காக?

எனவே, இது போன்ற வாதங்கள் அபத்தமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்திக்கத் தான் வேண்டும்.

*ஒரு முஃமீன் எவற்றில் அறிவைப் பயன்படுத்த வேண்டுமோ அதில் அறிவை பயன்படுத்துவதும் எவற்றில் அறிவை பயன்படுத்தாமல் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டுமோ அவற்றில் அப்படியே நம்புவதுதான் இஸ்லாம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *