தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி

*தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி*

இறைவன் தனது திருக்குர்ஆன் வசனங்களில் மனித குலத்துக்கு அறிவுரை கூறும் போது,

*தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.*

அல்குர்ஆன் 67:12

*அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.*

அல்குர்ஆன் 21:49

தனிமையில் தன்னைத் தானே பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்வாரேயானால், அது நிச்சயமாக அவரைப் பரிசுத்தப்படுத்தும் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.

*தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.*

அல்குர்ஆன் 35:18

*இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும் மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக*!

அல்குர்ஆன் 36:11

யார் தனிமையில் இறைவனை அஞ்சுகின்றாரோ அத்தகையவருக்கு மகத்தான, பிரம்மாண்டமான கூலியைத் தயாரித்து வைத்திருப்பதாக இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான்.

தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கின்ற மரியாதைக்குரிய கூலிக்குச் சொந்தக்காரர்களாக மாறி விட முடியும் என்று அல்லாஹ் சான்று பகர்கின்றான்.

———————-

ஏகத்துவம்

தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed