தண்டனைகள்
இறை நிராகரிப்பவர்களுக்குரிய தண்டனைகள்
படைப்பினங்களிலே சிறந்த படைப்பாக மனிதர்களை படைத்து,
அவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை கற்றுக் கொடுப்பதற்காக தன்னுடைய வார்த்தையாகிய குர்ஆனையும், அவனுடைய இறுதி தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் அனுப்பியுள்ளான். நாம் இவ்வுலகத்தில் வாழும் போது அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டிதந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் தடைசெய்த தீமைகளை விட்டும் விலகி, நன்மையின் பக்கம் விரைய வேண்டும்.
திருக்குர்ஆனின் அறிவுரைகளையும் இறைத்தூதரின் உபதேசங்களை மதிக்காமல் தீமையான காரியங்களை செய்து வந்தால் மறுமைநாளில் கடுமையான தண்டனை இறைவன் தயார் செய்து வைத்திருக்கிறான். அந்த தடண்டனை நம்மால் தாங்க முடியாது. எனவே அந்த தடண்னைகளை அறிந்து இஸ்லாம் தடைசெய்த தீமைகளை விட்டும் தவிர்ந்திடுவோம்.
இறை தண்டனையின் கடுமை கண்டோர்
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிலிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்” என்று கூறினார்.
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்)
“அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) “உன்னால் அதைத் தாங்க முடியாது’. அல்லது “உன்னால் அதற்கு இயலாது’ என்று கூறிவிட்டு, நீ “இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு
அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி), நூல் : முஸ்லிலிம் 5216
மறுமையில் கிடைக்கும் தண்டனை மிகக் கடுமையானது என்பதை நாம் விளங்கி தவறுகளை விட்டு விலகியிருக்க வேண்டும். மறுமையில் தண்டனைப் பெறக் கூடியவர்களை இனிமேல் காண்ப்போம்.
இறை மறுப்பாளருக்குரிய தண்டனை
ஒரே ஒரு கடவுள் தான் உலகத்திற்கு இருக்கிறான் என்றும்,
அவனுக்கு மனைவி, மக்கள், குடும்பம் மற்றும் பலவீனங்கள் எதுவுமே இல்லை என்றும் இஸ்லாம் சொல்கிறது. இந்த நம்பிக்கைக்கு எதிராக நடந்தால் கப்ரிலும், மறுமையிலும் மிகக் கடும் தண்டனை உண்டு எனவும் இஸ்லாம் கூறுகிறது.
ஒருமனிதர் “அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாüல் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இந்த உலகில் அவனை இருகால்கüனால்
நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாüல் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி 4760, முஸ்லிலிம் 5406
நபி (ஸல்) அவர்கüடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்ட போது அவர்கள், “அவருக்கு என் பரிந்துரை மறுமை நாüல் பயனüக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்” என்று சொல்ல நான் கேட்டேன்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி 3885
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவருடைய தோழர்கள், திரும்பிச் செல்லும்போது, அந்த அடியார் அவர்களது செருப்பின் ஓசையைச் செவியேற்பார். அப்போது இரு மலக்குகள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, “இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக்கொண்டிருக்கிறாய்?” என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர்.
அவர் மூமினாயிருந்தால்“”இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகிறேன்”” எனக் கூறுவான். அவரிடம் “(நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உனது இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான்” எனக் கூறப்படும். இரண்டையும் அவர் ஒரே நேரத்தில் பார்ப்பார்
அவருக்கு அடக்கக்குழி (கப்று) விசாலமாக்கப்படும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவர் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் “இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?”” என
அவனிடம் கேட்கப்படும்போது “எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிலிக்கொண்டிருந்ததையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்” என விடையளிப்பான். உடனே “நீ அறிந்திருக்கவுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால்
அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர் ; அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி 1374
…. அதனை தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ளுமளவு அவனைப் பூமி நெருக்கும் அவனை அந்த இடத்திலிலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி),
நூல் : திர்மிதி 1071
கப்ரில் மலக்குமார்கள் கேள்வி கேட்கும் போது நல்லவர்களாக இருந்தால் தயக்கமின்றிப் பதிலுரைப்பார்கள். முனாபிக், காபிர்களிடம் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறுவார்கள். மறுமை நாள் வரை அவர்களுக்கு வேதனை செய்யப்படும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம்.
…. மண்ணறையில் விசாரணை முடிந்ததும் நல்லவர்கள் யுக முடிவு நாள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் என்றும், தீயவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: திர்மிதீ 991
நெருக்கடியான வாழ்க்கை
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம் (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்கு தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு மக்கள் அல்லாஹ்வும், அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறைமறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யபடுவதை (குறிப்பிடுகிறது). எனது உயிர் எவன் கைவசம் உள்ளதே அவன் மீது அணையாக! அவனுக்கு எதிராக தொண்னூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். ஒவ்வொரு பாம்புகளுக்கு ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் அவை ஊதிக் கொண்டும், தீண்டிக் கொண்டும், ஊர்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்னத் அபீ யஃலா 6644
தீயவர்களாக இருந்தால் மரணத்திற்கு பிறகு கப்ரில் மிகக் கடுமையான வேதனை இருக்கிறது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம்.
ஒவ்வொருவரும் செய்பவற்றை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்க, அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்களா? “அவர்களைப் பற்றி விளக்குங்கள்!” என்று கூறுவீராக! பூமியில் அவனுக்குத் தெரியாததை அவனுக்கு அறிவிக்கிறீர்களா?
அல்லது வெறும் வார்த்தைகளா?
(ஏக இறைவனை) மறுப்போரின் சூழ்ச்சி அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் (நல்) வழியிலிலிருந்து தடுக்கப்பட்டு விட்டனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் இல்லை.
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமையானது. அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவன் எவனும் இல்லை.
அல்குர்ஆன் 13: 33, 34
“ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது.
நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன். (என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.” என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 3 : 55, 56
இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காக தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்வதில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை.
அல்குர்ஆன் 9: 74
ஏக இறைவன் அல்லாஹ்வை மறுப்பவர்கள் மற்றும் ஏக இறைவனை ஏற்றதாக நடிப்பவர்கள் இவர்கள் நிரந்தரமாக நரகில் இருப்பார்கள்.
நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது.
அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.
அல்குர்ஆன் 9:68
இஸ்லாத்தை ஏற்றதாக கூறிக்கு கொண்டு இரட்டை வேடம் போடும் நயவஞ்சகள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள்.
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
அல்குர்ஆன் 4:145
அதிக பருமனான உடல்
கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காக நரகவாசிகளை அதிக பருமனான உடல் உள்ளவர்களாக மாற்றப்படுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6551
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகத்தில்) இறைமறுப்பாளனின் “கடை வாய்ப் பல்’ அல்லது “கோரைப் பல்’ உஹுத் மலையைப் போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிலிம் 5479
கடமையான தொழுகையை தொழாதவர்களுக்குரிய தண்டனை
முஸ்லிலிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் தொழுயைôகும். இதுவே முஸ்லிலிம்களின் அடையாளம் ஆகும். அதாவது கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். அவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 74:41,44
நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் குர்ஆனைக் கற்றுஅ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி),
நூல் : புகாரி 1143