தடை செய்யப்பட்ட காரியங்கள் 01

  1. அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது,
  2. முகத்தில் அடித்தல்,
  3. உருவச் சிலைகள் & தானாக செத்தவை, மதுபானம், செத்தவை, பன்றி
  4. ஒட்டு முடி வைத்தல்,
  5. பச்சை குத்துதல்,
  6. குறிகாரர்களிடம் செல்லுதல்,
  7. சகுணம் பார்த்தல் ,
  8. இசை,
  9. பிராணிகளின் அங்கங்களை சிதைக்கக்கூடாது
  10. மஹர் இல்லா திருமணம் கூடாது

 

  1. அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது,   

எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி (3836)

2. முகத்தில் அடித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (2559)

3. உருவச் சிலைகள் & தானாக செத்தவை, மதுபானம், செத்தவை, பன்றி,

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, அல்லாஹ்வும்

அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்! என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள்.

அப்போது தொடர்ந்து,அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல்: புகாரி (2236)

4. ஒட்டு முடி வைத்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி (5937)

\
\

நபி (ஸல்) அவர்கüடம் ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளுடைய தலைமுடி கொட்டி விட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன். அவளது தலை முடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா (ரலி),

நூல் : புகாரி (5941)

5. பச்சை குத்துதல்

பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (யாராவது உங்களில்) இருக்கின்றாரா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். நான் எழுந்து, “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு

அவர்கள், “என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்க, “(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்திவிடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன் எனக் கூறினேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (5946)

6. குறிகாரர்களிடம் செல்லுதல்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சோதிடர்கள் (பொருட்படுத்தத்தக்க) ஒரு பொருளே அல்ல” என்று பதிலளித்தார்கள்.

அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகிவிடுகிறதே (அது எப்படி?)” என்று வினவினர். அதற்கு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த உண்மையான வார்த்தைகளை ஜின்கள் (வானவர்களிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டுவிடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி (6213)

7. சகுணம் பார்த்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள்.

மக்கள், “நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (5754)

8. இசை,

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ அவர்கள் கூறியதாவது: “அபூஆமிர் (ரலி) அவர்கள்’ அல்லது “அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்’ என்னிடம் கூறினார்கள் அல்லாஹ்வின் மீதாணையாக

அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை.லி (அவர்கள் கூறியதாவது:) நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில்

அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிகேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், “நாளை எங்களிடம் வா” என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்களில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல் அஷ்அரீ (ரலி), நூல்கள் : புகாரி (5590), பைஹகீ அஸ்ஸுனனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272

9. பிராணிகளின் அங்கங்களை சிதைக்கக்கூடாது

நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்கன்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),

நூல் : புகாரி (5516)

10. மஹர் இல்லா திருமணம் கூடாது

ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றொருவரிடம் “நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே “ஷிஃகார்’ எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் “மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் :புகாரி (5112)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed