ஜமாஅத் தொழுகைக்கு அதிக நன்மை ஏன்?

ஜமாஅத்துடன் தொழுதால் நன்மை அதிகமாகவும் தனியாகத் தொழுதால் நன்மை குறைவாகவும் கிடைப்பது ஏன்?

வணக்க வழிபாடுகளில் இதற்கு ஏன் கூடுதன் நன்மை? இதற்கு ஏன் குறைவான நன்மை என்று அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லி இருந்தால் தான் நாமும் அது பற்றி சொல்ல முடியும். ஜமாஅத்தாக தொழுவதற்கு அதிக நன்மைகள் வழங்குவதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. இது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரம். அவன் நாடியதைச் செய்வான் என்பது தான் இது போன்ற எல்லா கேள்விகளுக்கும் உரிய ஒரே பதிலாகும்.

அல்லாஹ் எதற்காக இப்படி ஜமாஅத் தொழுகைக்கு அதிக நன்மைகளை அளிக்கிறான் என்பதற்குத் தான் நாம் காரணம் கூற முடியாது என்றாலும் அதனாலும் நாம் அனுபவத்தில் பெறுகின்ற நன்மைகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.

ஜமாஅத்தாகத் தொழும் போது மனிதர்கள் மத்தியில் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பாகுபாடு நீங்குகிறது.

நல்ல மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகும் நிலை ஏற்படுகிறது. ஒருவர் நிலையை மற்றவர்கள் அறியும் போது இல்லாதவருக்கு இருப்பவர்கள் உதவும் நிலைமை ஏற்படுகிறது.

பலருடன் கலந்து பழகுவதால் இஸ்லாத்தின் தனித்தன்மையை நாம் விட்டுவிடும் நிலை நிச்சயமாக ஏற்படும். அந்த நிலை ஏற்படாமல் ஜமாஅத் தொழுகை தடுக்கும்.

குடும்பப் பிரச்சனைகளை மட்டுமே அறிந்து கொள்ளும் ஒருவர் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதன் மூலம் சமுதாயப் பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

நேரம் தவறாமையை மனிதன் கடைப்பிடிக்கவும் அதனால் உலக வாழ்க்கையிலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்து முன்னேற உதவுகிறது.

சிந்தித்துப் பார்த்தால் இன்னும் அநேக நன்மைகள் இதில் இருப்பதைக் காணலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed