*சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்*

——————————————————————

செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

*ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி* கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது *நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்* என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் *2:155, 157*

*உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.*

அல்குர்ஆன் *47:31*

*உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.* உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆன் *3:186*

——————————-

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed