*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 14* ||

[ஆலு இம்ரான்

(அத்தியாயம் *3* வசனங்கள் *151-160* வரை)]

1) எதன் காரணமாக *மக்களிடம் நபிகளார் கனிவாக* நடந்து கொண்டார்கள்?

2)*யார் உதவி செய்தால்* நம்மை எவராலும் வெல்ல முடியாது? 

3)நாம் *சேமித்து வைத்திருக்கும் செல்வங்களை*(இவ்வுலகில் பயனளிக்கும் அனைத்தும்) விட எது பெரியது?

4) உஹுதுப் போரில் *சிறுதூக்கத்தின் போது யாருடைய வாள்* பலமுறை கையிலிருந்து நழுவி விழுந்தது?

5) a) உஹுதுப் போர்க்களத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களுக்கு *நபிகளார் அவர்கள் இட்ட கட்டளை என்ன?*

b) இக்கட்டளைய அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் *அணியினர் எதற்காக மீறினார்கள்?*

1) *அல்லாஹ்வுடைய அருளின் காரணமாக*

(நபியே!) *அல்லாஹ்வின் அருளைக் கொண்டே* நீர் அவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கிறீர். (3:159)

_______________________

2)*அல்லாஹ் நமக்கு உதவி செய்வானானால்*

*உங்களுக்கு அல்லாஹ் உதவினால் உங்களை வெல்பவர் யாருமில்லை*.(3:160)

_________________________

3) *அல்லாஹ்வின் பாதையில் நாம் கொல்லப்பட்டால், அல்லது இறந்துவிட்டால்* இதன் பலனாக 

*அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும்* நாம் சேகரித்து (க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட சிறந்ததாகும்.

*அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ அல்லது மரணித்தாலோ, அல்லாஹ்வின் மன்னிப்பும் அருளும்* அவர்கள் எதைச் சேகரித்துள்ளார்ளோ அதைவிட மிகச் சிறந்தது. (3:157)

_______________________

4) *அபூதல்ஹா(ரலி)* அவர்கள் 

(புஹாரி: 4068)

_________________________

5) a) நபிகளார் (நாங்கள் போரில் கொல்லப்பட்டு) *எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இந்த இடத்தை விட்டு நகராதீர்கள்*. (புஹாரி 3039)

b) அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தடுத்தும் *கள நிலவரம் அறியாமல் அம்மக்கள் கனீமத் பொருட்களை (போர்ச்செல்வங்களை) எடுக்க சென்றுவிட்டனர்*

 (புஹாரி 3039)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *