*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
நாள்: *11-10-24*
|| *கேள்வி 11* ||
[ஆலு இம்ரான்
(அத்தியாயம் *3* வசனங்கள் *121-130* வரை)]
A) இந்த வசனம்(3:128) அருளப்பட்டதற்கு *இரண்டு சம்பவங்கள்* முன்வைக்கப்படுகிறது அதில் *எந்த சம்பவம் சரியானது?*
B)குனூத் நாஷிலா (*قنوت نازله*) என்றால் என்ன?
C) இந்த வசனத்தில்(3:122)அல்லாஹ் கூறும் *இரு குழுவினர் யார்?*
D) பத்ர் போர் *உருவான காரணம்* என்ன?
_________________________
A) *உஹதுப் போரில் நபிகளார் எதிரிகளால் தாக்கப்பட்டபோது*..
“*தமது நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்*” என்று வேதனை தாள முடியாமல் கூறினார்கள். அப்போது தான் “*அதிகாரத்தில் உமக்குப் பங்கில்லை*” என்ற இவ்வசனம் (3:128) அருளப்பட்டது என்பதே சரியானதாகும். (*முஸ்லிம் 3667*)
—————————–
B) *குனூத் நாஸிலா* என்பது *சோதனைக் காலத்தில் ஓதிய பிரார்த்தனையாகும்…*
*இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும்* கடமையான தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருக்கூவிற்கு பிறகு நபிகளார் ஓதிய குனூத் ஆகும்.
——————————-
C) *பனூ சலிமா* மற்றும் *பனூ ஹாரிஸா* (بَنِي سَلِمَةَ وَبَنِي حَارِثَةَ)
(புகாரி: 4051)
—————————–
D) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.
தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.
நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.
இந்த நிலையில் தான் மக்காவின் முக்கியப் பிரமுகரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனாருமான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.
எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்ற படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.
இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.
வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்து பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும் அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத் தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.
எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படை பலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள்.
ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை “பத்ர்’ என்னும் இடத்தில் எதிர் கொண்டார்கள்
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*