*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 10* ||

[ஆலு இம்ரான்

அத்தியாயம் *3* (வசனங்கள் *111-120* வரை)]

A) أُو۟لَـٰٓئِكَ مِنَ ٱلصَّـٰلِحِينَ (*உலாயிக்க மினஸ் ஸாலிஹீன்*) இவர்கள்  எத்தகையோர்? 

B) *இறைமறுப்பாளர்கள் இவ்வுலகில் செய்யும் செலவுகள் எதற்கு ஒப்பானது*?

C) *தீயவர்களின் தீங்கிலிருந்தும், கெட்டவர்களின் சூழ்ச்சியிலிருந்தும் தப்பிக்க* அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு கூறும் உபதேசம் என்ன?

______________________

A) *அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, நன்மையை ஏவி, தீமையை தடுத்து நற்காரியங்களை விரைந்து செய்பவர்களே* உலாயிக்க மினஸ் ஸாலிஹீன்கள் 

அவர்கள் *அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்றனர். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர். நற்காரியங்களில் விரைந்து செல்கின்றனர்*. அவர்கள் *நல்லவர்கள்* ஆவர். (3:114)

————————–

B) *இறைமறுப்பாளர்கள் செய்யும் செலவினங்கள் கடும் குளிர் காற்றினால் அழிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒப்பானது*

*இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவு செய்வதன் உதாரணம், கடும் குளிரான காற்றைப் போன்றது. தமக்குத் தாமே அநியாயம் செய்துகொண்ட கூட்டத்தாரின் பயிர்களை அது தாக்கி அழித்துவிட்டது*. (3:117)

————————–

C) *பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் இருத்தல்*

நீங்கள் *பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்குச் சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தாது*. (3:120)

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *