*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்*

குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, *எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்* என்று கூறுவதை நீர் காண வேண்டுமே!

*நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம்*.

மாறாக *அனைத்து (கெட்ட) மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்* என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது. *இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததால் அனுபவியுங்கள்! நாமும் உங்களை மறந்து விட்டோம்.*

*எனவே நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்!* (என்று கூறப்படும்.)

*நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும்போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்*.

*அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்*.

அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக *கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை* எவரும் அறிய மாட்டார்.

*நம்பிக்கை கொண்டவர் குற்றம் செய்தவரைப் போல் ஆவாரா*? அவர்கள் சமமாக மாட்டார்கள்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (*நன்மை) செய்து கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன*.

*குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம்*.

அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள்.

“*நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்*!” என்று அவர்களுக்குக் கூறப்படும்.

அவர்கள் திருந்துவதற்காக *இப்பெரிய வேதனைக்கு முன்னர் (இவ்வுலகில்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்*.

*தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்?*

*நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம்.*

[அல்குர்ஆன் 32:12-22]

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *