குர்ஆனில் சினிமாவைப் பற்றி… ?

ஒருமுறை (World Students Association) உலக மாணவர் கழகத்தைச் சார்ந்த மாணவர் குழு ஒன்று அப்துல் அலீம் ஸித்திக்கி அவர்களை பேட்டி கண்டனர்.

அவர்களில் ஒருமாணவர்,

குர்ஆனில் உலகிலுள்ள அனைத்தும கூறப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால் இக்காலத்திலுள்ள சினிமாவைப்பற்றி கூறப்பட்டிருக்கிறதா? என கிண்டலாகக் கேட்டார்.

அப்போது சினிமா அறிமுகமகாத காலம். ஸித்தீக்கீ அவர்கள், சினிமா என்றால் என்ன என்று சற்று விளக்மாகக்கூறுங்கள். பினனர் நான் பதில் சொல்கிறேன் என்றார்கள்.

அந்த மாணவர்,

“கற்பனைக் கதைகளை விலைக்கு வாங்கி அதில் கூத்தாடிகளை நடிக்க வைத்து, மக்களை சிரிக்கவைத்துப் பொழுது போக்குவது தான் சினிமா என்று விளக்கம் கூறினார்.

உடனே மௌலானா அவர்கள் “ஆம்! அதுபற்றி குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறதே என்றார்கள். அவரோ வியப்பு மேலீட்டால், ‘ எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் என மீண்டும் வினாவைத் தொடர்ந்தார் அந்த மாணவர்.

அதைக் கேட்ட மௌலானா சிறிதும் தயஙகாமல், குர்ஆனின் 31வது அத்தியாயத்தில் சூரா லுக்மானில் ஆறாவது வசனத்தில்

وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُواً أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ

(அல்குர்ஆன் : அத்தியாயம் -லுக்மான், வசனம்- 33)
மனிதர்களில் சிலர் உள்ளனர்.அவர்கள் வீணான செய்திகளை ( பெய்யான கட்டுக்கதைகளை) விலைக்கு வாங்கி அறிவின்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுத்து அதனை பரிகாசமாக்கிக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு (31:6)

என்ற திருமறை வசனத்தை ஓதிக் காண்பித்து கேள்வி கேட்டவரையே வாயடைக்கசெய்தார்கள். உடனே அந்த மாணவர் குழு அனைவரும் “1400 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவைப்பற்றியும் கூறப்பட்டி ருக்கிறதே” என்று அதிசயித்து இஸ்லாத்தை ஏற்றனர்.

சினிமாவை சென்ற நூற்றாண்டில் தான் கணடுபிடித்தார்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றி மிகத்துல்லியமாகக் கூறப்பட்டிருக்கிறதென்றால் அது முக்காலத்தையும் அறிந்த இறைவனின் வேதவாக்காகத்தான் இருக்கமுடியும் என்பதில் என்ன சந்தேகமிருக்கமுடியும் ?

இதுவும் குர்ஆன் இறைவேதம் என்பதற்கும், அல்லாஹ் கூறும் வீணாணவர்கள் யார் என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed