*குடிக்கும் பானத்தில் வாயால் ஊதுவது கூடுமா?❓*
✔அபூசயீத் அல்குத்ரீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நபி ( ஸல் ) அவர்கள் , ( பருகும் எனத்தினுள் ( வாயால் ஊதுவதற்குத் தடை விதித்தார்கள் . அப்போது ஒரு மனிதர் , ” பாத்திரத்தினுள் தூசு துரும்பு எதேனும் இருப்பதை நான் கண்டால் . . . ( என்ன செய்வது ) ? ” என்று கேட்டார் .
  அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் , அந்தத் தூசு துரும்பு உள்ள பகுதியைக் கீழே கொட்டிவிடுக ! என்றார்கள் .
   அந்த மனிதர் . ” ஒரே மூச்சில் பருகினால் எனக்குத் தாகம் அடங்குவதில்லை ( பருகும்போது இடையிடையே மூச்சுவிட்டுப் பருகினால்தான் தாகம் அடங்குகிறது . என்ன செய்வது ) ? ” என்று கேட்டார் .
   நபி ( ஸல் ) அவர்கள் ” அவ்வாறாயின் , கோப்பையை உனது வாயிலிருந்து அகற்றி ( மூச்சுவிட்டுக் கொள்க) ! ” என்றார்கள் .
-திர்மிதீ 1809

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *