கேள்வி: கவச ஆடை செய்வதை அல்லாஹ் யாருக்கு கற்றுக் கொடுத்தான்?

பதில்: தாவூத் நபி (குர்ஆன் 21:80)

கேள்வி: சுவனத்தில் இவை இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?

பதில்: பசி, நிர்வானம், தாகம், & வெயில் (அல்குர்ஆன் 20:118,119)

கேள்வி: ஈஸா நபி அவா்கள் செய்த அற்புதங்கள் யாவை?

பதில்: குழந்தையாக இருக்கும் போது பேசியது, களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் , பிறர் உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல்
(அல்குர்ஆன் 3:49 & 5:110)

கேள்வி: தொழுகையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியான இடம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்: ஸஜ்தாவில் ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் (ஆதாரம் : முஸ்லி­ம் 824)

கேள்வி: அல்பகரா அத்தியாயத்தின் வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் இறங்கியபோது நபியவர்கள் மக்களிடம் வந்து எந்த வியாபாரம் தடை செய்யப்பட்டுவிட்டது என்றார்கள்?

பதில் : மது வியாபாரம் (ஆதாரம் புகாரி: 2226)

கேள்வி : ஓர் இறை நம்பிக்கையாளர் தம் பாவங்களை எவ்வாறு கருதுவார்?

பதில்: இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார்.

அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். (ஆதாரம்: புகாரி 6308)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆணும் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதலாவது எதை கூறினார்கள்?

பதில்: உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்கு நீங்கள் கொடுக்கும் மஹர் தான்
ஆதாரம் : புகாரி – 2721
——————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed