? கடமையான தொழுகைக்குப் பின்பு கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால்நம்மை துஆ கேட்கும் படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். தனது அடியான்கையை உயர்த்தி கேட்கும் போது அவனை வெறுங்கையுடன் திரும்ப அனுப்புவதற்குஅல்லாஹ் வெட்கப்படுகின்றான் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் சவூதியில்கடமையான தொழுகைக்குப் பின் துஆ கேட்கும் போது கையை உயர்த்தக் கூடாது, நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, மற்ற நேரங்களில் கையை உயர்த்தலாம்என்று கூறுகின்றார்களே? இது சரியா?

நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்திபிரார்த்தித்துள்ளார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள்.ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்குவந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். பிறகு தமது கைகளை உயர்த்தி, நீண்ட நேரம்நின்று துஆச் செய்வார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகுஇடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குச் சென்று கிப்லாவை முன்னோக்கி,நீண்ட நேரம் நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு பத்னுல்வாதியிலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். “இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கின்றேன்” என்றுகூறுவார்கள்.

நூல்: புகாரி 1751, 1753

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உளூச் செய்தார்கள். பிறகு தம் இருகரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரைஆக்கி விடுவாயாக!” என்று பிராத்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்களின்வெண்மையை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 6383

நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்யும் போது அவர்களது அக்குள் வெண்மை தெரியும் வரைதமது இரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1490

தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக்கூடிய ஒரு மனிதன், “என் இறைவா! என் இறைவா!” என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும்நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்புஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன்ஹராமிலேயே மூழ்கடிக்கப் பட்டிருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1686

நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்திப்பிரார்த்திருப்பதையும், அவ்வாறு பிரார்த்திப்பதை அங்கீகரித்திருப் பதையும் இந்தஹதீஸ்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கைகளை உயர்த்திப்பிரார்த்திக்கலாம் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் செய்த, அங்கீகரித்த ஒரு விஷயத்தை ஒரு குறிப்பிட்டசந்தர்ப்பத்தில் செய்யக் கூடாது என்றால் அதற்கு நேரடியான தடை இருக்க வேண்டும்.

உதாரணமாக உபரியான நோன்புகள் எந்த நாளிலும் நோற்க மார்க்கத்தில் அனுமதிஉள்ளது. ஆனால் பெருநாட்களிலும், வெள்ளிக்கிழமைக்கென்று பிரத்தியேகமாகவும்,நோன்பு நோற்கத் தடை உள்ளது. எனவே இந்த நாட்களில் நோன்பு நோற்கக் கூடாதுஎன்று கூறலாம். அதே சமயம், இவ்வாறு குறிப்பிட்ட தடை எதையும் காட்டாமல், “நபி(ஸல்) அவர்கள் புதன் கிழமை நோன்பு நோற்றதாக ஹதீஸ் எதுவும் இல்லை, எனவேபுதன் கிழமை நோன்பு நோற்கக் கூடாது” என்று யாரும் கூற மாட்டார்கள்.

இது போன்று தான் கைகளை உயர்த்தி துஆச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கும் போது, தொழுகைக்குப் பின் அவ்வாறு செய்யக் கூடாது என்றால்அதற்கு நேரடியான தடையைக் காட்ட வேண்டும். நாம் தேடிப் பார்த்த வரையில்ஹதீஸ்களில் அவ்வாறு தடை எதுவும் இல்லை. எனவே தொழுகைக்குப் பின்தாராளமாக கைகளை உயர்த்திப் பிரார்த்திக்கலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed