ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன?

பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற பிரச்சனையைச் சந்தித்த நபித்தோழருக்கு இவ்வாறே நபியவர்கள் வழிகாட்டினார்கள்.

ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்கüடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு)இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், “பக-ன் இரு ஓரங்கüலும் இரவின் நிலைகüலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாகநன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன” எனும் (11:114) வசனத்தை அருüனான். அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவருக்கும் தான்” என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 526

உளூச் செய்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதால் அத்தொழுகை முன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகி விடும்.

பாவம் செய்துவிட்ட அடியான் அழகுற அங்கத்தூய்மை செய்கிறார். பிறகு எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுகிறார். பிறகு அவர் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோதமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள்‘ எனும் (3:135) வசனத்தை அதன் இறுதி வரை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி), நூல்: அபூதாவூத் 1300

(மதீனாவிலுள்ள) “மகாயித்‘ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்கüடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக அங்க சுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு “நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக அங்கசுத்தி செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “யார் இதைப் போன்று (முழுமையாக) அங்கசுத்தி செய்துபள்üவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “(ஆனால்இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்கüல் மூழ்கி) விடாதீர்கள்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான் பின் அபான், நூல்: புகாரி 6433

ஐந்து நேரத் தொழுகைகள்ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ, (தொழுது) ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று) பெரும் பாவங்களை விட்டு விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 344

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நம்பிக்கை கொண்டுநன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 38

மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம்ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும்.  அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.  (அல்குர்ஆன் 2:271)

ஒரு தீமையைச் செய்து விட்டால் அதற்கான பரிகாரமாகத் தான் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் அதே தீமையைச் செய்து விட்டு, தவ்பா செய்து கொண்டால் போதும் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் தவ்பாவின் நிபந்தனையே அந்தப் பாவத்தை மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்பது தான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோதமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3:135)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed