\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\

*ஒருவர் கோபப்பட்டால் உளு செய்து கொள்ளட்டும்* & *கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும்*

4152 حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا أَبُو وَائِلٍ الْقَاصُّ قَالَ دَخَلْنَا عَلَى عُرْوَةَ بْنِ مُحَمَّدٍ السَّعْدِيِّ فَكَلَّمَهُ رَجُلٌ فَأَغْضَبَهُ فَقَامَ فَتَوَضَّأَ ثُمَّ رَجَعَ وَقَدْ تَوَضَّأَ فَقَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي عَطِيَّةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْغَضَبَ مِنْ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنْ النَّارِ وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ رواه ابوداود

கோபம் ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது. எனவே, உங்களில் *ஒருவர் கோபப்பட்டால் உளு செய்து கொள்ளட்டும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதிய்யா (ரலி)

நூல் :அபூதாவூத் (4152)

*இச்செய்தியில் இடம்பெறும் உர்வா பின் முஹம்மத் அஸ்ஸஅதீ என்பவர் யாரென அறியப்படாதவர்.*

*கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும்*

4151 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ عَنْ خَالِدٍ عَنْ دَاوُدَ عَنْ بَكْرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا ذَرٍّ بِهَذَا الْحَدِيثِ قَالَ أَبُو دَاوُد وَهَذَا أَصَحُّ الْحَدِيثَيْنِ رواه ابوداود

*ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும்*. கோபம் போனால் சரி, இல்லையானால் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : அபூதாவூத் (4151)

இச்செய்தியை இருவழிகளில் அபூதாவூத் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். ஒரு வழியில் அறிவிப்பாளர் தொடர் இணைந்ததாகவும் ஒருவழியில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாகவும் உள்ளது. இதில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாக வரும் செய்தியே சரியானதாகும் என்று அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இச்செய்தியில் இடம் பெறும் *தாவூத் பின் அபீ ஹின்த்* என்ற அறிவிப்பாளர்களிடமிருந்து *அபூமுஆவியா என்பவர் *தாவூத் பின் அபீஹின்த்இ அபூஹர்ப்* வழியாக அறிவிக்கிறார். இது முன்கதிவு (*தொடர்பு அறுந்த செய்தியாக*) இடம் பெற்றுள்ளது.

இதைப் போன்று காலித் என்பவர் *தாவூத் பின் அபீ ஹின்த்இ பக்ர் பின் அப்துல்லாஹ்* என்பவர் வழியாக முர்ஸலாக (நபித்தோழர் இல்லாமல் தொடர்பு அறுந்து) இடம்பெற்றுள்ளது.

இதைப் போன்று *அப்துர்ரஹீம் பின் சுலைமான் என்பவர் தாவூத் பின் அபீஹின்த், பக்ர் பின் அப்துல்லாஹ் வழியாக முன்கதிவு (தொடர்பு அறுந்ததாக*) அறிவித்துள்ளார்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed