ஒப்பீடு 

சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் – 6:36, 6:122, 27:80, 30:52, 35:22

 

நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் – 5:16, 6:122, 13:16, 24:35, 35:20, 39:22, 57:9, 65:11

 

இறைவசனங்களை நிராகப்பவர்களை செவிடர்களுக்கும், ஊமைகளுக்கும் ஒப்பிடுதல் – 6:39, 10:42, 10:43, 11:24, 13:16, 13:19, 21:45, 30:52, 43:40

 

நேர்வழியில் இருப்பவனை பார்வையுள்ளவனுக்கும், வழிகெட்டவனை குருடனுக்கும் ஒப்பிடுதல் – 6:50, 35:19, 40:58, 41:17

 

மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும் மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல் – 7:57

 

மனோ இச்சையைப் பின்பற்றி இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல் – 7:176

 

சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல் – 7:179, 25:44, 47:12

 

தவறான கொள்கையில் இருப்பவனை ஆற்றோரத்தில் இடிந்து விழும் கட்டடத்தைக் கட்டியவனுக்கு ஒப்பிடுதல் – 9:109

 

அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம் தானாக தண்ணீர் வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து கைகளை விரித்தவனுக்கு ஒப்பிடுதல் – 13:14

 

நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல் – 14:18

 

ஆழப் பதிந்து கிளை விடும் மரத்தை நல்ல கொள்கைக்கு உதாரணமாகக் கூறல் – 14:24,25

 

திடீரென்று அழிந்து போகும் செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல் – 10:24, 18:45, 57:20

 

அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும், சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல் – 13:17

 

பிடுங்கி எறியப்பட்ட மரத்துக்கு தீய கொள்கையை ஒப்பிடுதல் – 14:26

 

போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:75

 

சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:76

 

சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல்நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல் – 16:92

 

அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல் – 22:31

 

இணைகற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம் – 22:73

 

நிராகரிப்பவர்களின் செயல்களை கானல் நீருக்கு ஒப்பிடுதல் – 24:39

 

நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடல் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல் – 24:40

 

இறைவனுக்கு இணைகற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல் – 29:41

 

இணைகற்பிப்பவனுக்கு அவனையே உதாரணமாக எடுத்துக் காட்டுவது – 30:28

 

நேர்வழிக்கு நிழலையும், வழிகேட்டுக்கு வெயிலையும் உதாரணமாகக் கூறுதல் – 35:21

 

நல்லறம் செய்வோரை லாபம் தரும் வியாபாரம் செய்பவனுக்கு ஒப்பிடுதல் – 35:29

 

பலருக்கு உடமையான அடிமையை பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவோருக்கு உதாரணமாகக் கூறுதல் – 39:29

 

வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல் – 43:11

 

நபித் தோழர்களை செழிப்பான தோட்டத்துக்கு ஒப்பிடுதல் – 48:29

 

புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல் – 49:12

 

நல்வழியில் செலவிடுவதை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகச் சித்தரித்தல் – 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20

 

கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல் – 62:5

 

வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு ஒப்பிடுதல் – 67:22

 

ஈஸா நபியை ஆதம் நபிக்கு ஒப்பிடுதல் – 3:59

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed