ஒத்தி, போக்கியம் கூடுமா

கூடாது

வாகனம் அடமானம் பெறும்போது அதை கொடுப்பவரின் அனுமதியுடன் அனுபவிப்பது கூடும் என்ற அடிப்படையில் போகியத்திற்குரிய வீட்டை பயன்படுத்தலாம்.

போகியத்திற்கு பணம் கொடுப்பவர் ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் அந்த முதலீட்டுக்கு என்ன இலாபம்? அதற்குதான் வீடு பயன் படுத்தப் படுகிறது.

உதாரணமாக இரண்டு வருடத்திற்கு போகியத்திற்கு பணம் கொடுக் கும்போது இரண்டு வருடம் கழித்து வீட்டின் விலை கூடுகிறது. ஆனால் பணம் கொடுத்தவரின் பணம் மதிப்பு குறைகிறது. இந்த நஷ்டத்திற்கு என்ன செய்வது?

ஒரு கணிசமான பணத்தை போகியத்திற்கு கொடுப்பவர், வீட்டின் உரிமையாளருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் கொடுப்பதில்லை.

குறைந்த வருமானம் வந்தால் போதும் என்ற அடிப்படையில் வீட்டின் வாடகை கணக் கிட்டுக் கொள்கிறார். எனவே இது வியாபாரமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே போகியம் கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?

என்பதை தெளிவுபடுத்தவும்.

பதில்

போக்கியம், ஒத்தி என்ற பெயரில் தமிழகத்தில் பரவலாக காணப்படும் இந்த செயல் *மார்க்கத்திற்கு உட்பட்டதா? இல்லையா? *

என்பதை விளங்க முதலில் வியாபாரம், வட்டி பற்றிய சிறிய விளக்கத்தை தெரிந்து கொண்டு பின்னர் கேள்விக்குரிய பதிலை பார்ப்போம்.

வியாபாரம் என்பது, இலாபமும் நஷ்டமும் இணைந்தது. ஆனால் வட்டியில் இவ்வாறு இருப்பதில்லை. வட்டி எனும் போதும் அதில் உறுதி யான இலாபம் கிடைக்கிறது. மேலும் வியாபாரம் என்பதில் ஒரு தடவை ஒரு பொருளை வாங்கிவிட்டால் அல்லது விற்றுவிட்டால் அப்போது மட்டுமே ஒரு தடவை இலாபம் கிடைக்கும்.

தொடர்ந்து இலாபம் வந்து கொண்டிருக்காது.

ஆனால் வட்டியில் தொடர்ந்து இலாபம் வந்து கொண்டிருக்கும். இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டு போக்கியம் என்பதைப் பார்ப்போம்.

ஒருவர் ஒரு இலட்சம் ரூபாயை கொடுக்கிறார். அதற்காக ஒரு வீட்டை இரண்டு வருடத்திற்கு பயன்படுத்திக் கொள்ள பணத்தை கொடுக்கிறார். மேலும் இரண்டு வருடம் கழித்த பின்னர் கொடுத்த ஒரு இலட்சத்தையும் திருப்பி வாங்கிக் கொள்கிறார்.

இந்நிலையில் போகியத்திற்கு வீட்டை பயன்படுத்துபவர், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தால் அவர் சுமார் மாதம் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியானால் அவர் இரண்டு வருடத்திற்கு 48,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த பணம், அவர் கொடுத்த ஒரு இலட்சத்தால் கிடைத்திருக்கிறது.

இதை இன்னொரு கோணத்தில் பாருங்கள் : போக்கியத்திற்கு வாங்கிய வர் அந்த வீட்டை பயன்படுத்தாமல் மற்றவருக்கு வாடகைக்கு கொடுத்தி ருந்தால் இரண்டு வருடத்திற்கு 48,000 ரூபாய் வாங்கியிருப்பார். இந்த 48,000 ரூபாய் வட்டி இல்லையா? இதை வியாபாரத்துடன் ஒப்பிடமுடியுமா? இதில் இலாபமும் நஷ்டமும் இருக்கிறதா? இலாபம் மட்டும்தானே உள்ளது.

இது வட்டிதான் என்பதை புரிந்து கொள்ள இன்னொரு உதாரணத்தை கவனியுங்கள்: ஒருவர் இதே ஒரு இலட்சத்தை ஒருவருக்கு வழங்கி, மாதம் எனக்கு 2000 ரூபாய் வட்டி தர வேண்டும் என்று கூறுகிறார். அவரும் ஒத்துக் கொண்டு இரண்டு வருடம் 48000 ரூபாய் வட்டி கட்டுகி றார். பின்னர் ஒரு இலட்சத்தையும் திருப்பிச் செலுத்துகிறார். இதை கூடும் என்று சொல்வோமா?

வட்டி என்று பெயர் சொன்னால் கூடாது. அதற்கு வேறு பெயரில் வாங்கினால் கூடும் என்று நாம் கூற முடியுமா? என்பதை சிந்தியுங்கள் தவறு வெளிப்படும்.

போகியம் கூடும் என்பதற்கு சொல்லப்படும் ஆதாரம் பின்வரும் நபிமொழியுமாகும்.

அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப் பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர-),

நூல்கள் : புகாரி (2512) திர்மிதீ (1175), அபூதாவூத் (3059),

இப்னுமாஜா (2431), அஹ்மத் (6828)

இந்த ஹதீஸில் அடகு வைக்கப்பட்ட பொருளை பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்துள்ளதால் போகியத்திற்கு வழங்கப்படும் வீட்டையும் பயன்படுத்தலாம் என்று இந்த நபிமொழியை வைத்து வாதிடு கின்றனர்.

இந்த ஹதீஸ் அவர்களுக்கு சாதகமான செய்தி அல்ல! இதில் நபிகளார் கூறிய முக்கியமான விவரத்தை கவனிக்கத் தவறியுள்ளனர்.

அடகு வைக்கப்படுவது பிராணியாக இருந்தால் அதற்கு தீனி போடும் பொறுப்பு வைத்திருப்பவருக்கு வந்து விடுகிறது. இதனால் அவர் உதவிக் காக பணத்தையும் கொடுத்து அடகு வைக்கப்பட்ட பிராணிக்கு தீனியும் கொடுக்கும்போது அவருக்கு தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. அத னால் அந்த பிராணியில் பயணிக்கலாம் என்றும் அதன் பாலை அருந்த லாம் என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள். இக்கருத்து மிகத் தெளிவாக அந்த நபிமொழியில் இடம்பெற்றுள்ளது.

போகியத்திற்கு கொடுக்கப்படும் வீட்டில் தங்கியிருப்பவர் என்ன பராமரிப்பு செய்கிறார்? ஏதேனும் பராமரிப்பு செய்வதாக இருந்தால் பராமரிப் புச் செலவை தான் செய்வதாக வீட்டுக்குச் சொந்தக்காரராகிய பணம் வாங்கி யவர் சொன்னால் அவருக்கு இவர் வாடகை கொடுப்பாரா? சிந்தித்துப் பாருங்கள்.

நபிகளாரின் பொன்மொழி அடகு வைக்கப்பட்ட பொருளை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதற்காக செலவிட்டால் அந்த செலவிற்கு ஏற்றவாறு அதை பயன்படுத்துவது கூடும் என்பதைத்தான் காட்டுகிறது. இந்த நபிமொழியில் கூறப்பட்டவை போகியத்தின் அடிப்படையில் இருக்கும் வீட்டுக்கு பொருந்தவே செய்யாது.

போகியத்தின் வாங்குபவர் கணிசமாக பணத்தை கொடுக்கிறார் அதற்கு என்ன இலாபம் என்று கேட்கிறார்?

போகியத்திற்கு பணம் கொடுப்பவர் வியாபாரத்தின் அடிப்படையில் அவரிடம் பணம் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால் வியாபாரத் தின் விதிமுறைகளின் அடிப்படையில் பேசியிருக்க வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டவர் முதலீடு செய்யும் வியாபாரத்தில் இலாபம் வந்தால், இலாபத்திற்கு ஏற்றவாறு பெற்றுக் கொள்ள வேண்டும். நஷ்டம் வந்தால் நஷ்டத்திலும் பங்கு கொள்ள வேண்டும். இவ்வாறு போகியத்திற்கு பணம் கொடுத்தவர் ஏற்றுக் கொள்வாரா? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு திருப் பிக் கொடுக்கும்போது அவர் கொடுத்த இரண்டு இலட்சத்திற்கு பதிலாக 1,50,000 மட்டும் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளவாரா? இல்லை என்றால் அவர் வியாபாரத்தின் அடிப்படையில் பணத்தை கொடுக்கவில்லை என்பது தானே பொருள்.

ஒரு இலட்சம் பணத்தை போகியத்திற்கு கொடுத்தால் அதை குறிப் பிட்ட வருடம் கழித்து திரும்ப பெறும்போது அதன் மதிப்பு குறைந்து விடுகிறது. இதனால் கொடுத்தவர் பாதிக்கப்படுகிறாரா இல்லையா?

இந்த வாதம் சரிதான் என்றாலும் போகியத்திற்கு ஆதாரமாக இது அமையாது.

பணத்தின் மதிப்பு தற்போது தங்கத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது. எனவே பணத்தின் மதிப்பு மாற்றம் அடைந்து கொண்டிருக்கும். எனவே ஒருவர் ஒரு இலட்சத்தை கொடுத்தால் அன்றைய நாளின் தங்கத்தின் மதிப்பைக் கணக்கிட்டு கொடுக்கலாம். தற்போது தங்கம் ஒரு கிராம் 1375 ரூபாய் என்றால் ஒரு இலட்சம் என்பது சுமார் 72 கிராம் தங்கத்தின் மதிப்பில் இருக்கிறது. எனவே எனக்கு பணத்தை திருப்பித் தரும்போது 72 கிராம் தங்கத்தின் மதிப்புக்குரிய பணத்தை தரவேண்டும் என்று சொல்ல லாம். திருப்பி தரும்போது தங்கத்தின் விலை கூடியிருந்தாலும் சரி, குறைந் திருந்தாலும் சரி, 72 கிராம் தங்கத்தின் மதிப்புக்குரிய பணத்தையே வாங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போதும் அவர் கொடுத்த பணத்தின் மதிப்பு குறைவதில்லை.

எனவே வட்டியின் அடிப்படையில் அமைந்துள்ள போகியம் என்பது கூடாது என்பது தெளிவு.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed