இக்குழந்தை பிறந்திருந்தாலும். இக்குழந்தையின் செய்தியை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் இணைத்து தவறான விளக்கம் தரக்கூடிய பொருத்தமற்ற பதிவாக உள்ளது.

மேலும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் பொருத்தமற்ற பதிவு மட்டுமல்ல இதை பகிர்வதன் மூலம் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு தவறான விளக்கம் அளித்த பாவமும் சேர்ந்து விடும்.

இந்த பதிவில் அறிய வேண்டிய செய்தி என்னவென்றால், இவ்வுலகில் எத்தனையோ குறைபாடுடைய குழந்தைகள் அன்றாடம் பிறக்கிறது. அதில் இந்த குழந்தையும் ஒன்று. ஆனால் இந்த குழந்தையை மறுமை நாளுடன் அல்லது மறுமை நாளில் நடைபெறும் சம்பவத்தோடு பொருத்துவது அர்த்தமற்றது.

இப்படிப்பட்ட அறியாமையின் காரணமாக நாம் பரப்பி வரும் நிலையில் அர்த்தமற்ற விளக்கமாகவும், அறியாமையினால் பாவமாகவும் மாறி விடும்.

விளக்கம் :

அல்லாஹ் தனது திருமறையில் மறுமை விசாரணை நாளில் நடைபெறும் ஒரு சம்பவத்தை விளக்குகிறான்.

فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا

(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?

(திருக்குர்ஆன் 73:17)

இது தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

  1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) “ஆதமே!“ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் “(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்“ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் “(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்“ என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் “எத்தனை நரகவாசிகளை?“ என்று கேட்பார்கள்.

அதற்கு அவன் “ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)“ என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள #பயங்கரசூழ்நிலையின் காரணத்தால்) #பாலகன்கூட_நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகிற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள்.

ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும். இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, அவர்கள் “இறைத்தூதர் அவர்களே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் “(பயப்படாதீர்கள்;) நற்செய்தி பெறுங்கள்.

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாக பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்“ என்று கூறிவிட்டுப் பிறகு, “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கவேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன்“ என்று கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழக்கமிட்டோம். பிறகு, நபி(ஸல்) அவர்கள் “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்கவேண்டுமென

நான் பேராவல் கொள்கிறேன். மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள்“ என்றார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.111
(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்நாளின் கடுமை எத்தகைய நிலையையுடையது என்று விவரிக்குகிறார்கள்.

இந்நிலையில் குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பது சாதாரணமாகிவிட்டது. அதில் இந்த குழந்தை தலை நரைத்து பிறந்துள்ளது. எனவே இக்குழந்தை, மறுமை நாளுடன் தொடர்பு படுத்தி வரும் குழந்தை தலை நரைத்து விடும் என்ற குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறும் உண்மைக்கு புறம்பானது.

ஆக அன்பான சகோதரர்களே இச்செய்தியை யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இது தவறான விளக்கம். திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்ட செய்தி கியாமத் நாளின் போது நடைபெறும் நிகழ்ச்சி. கியாமத் நாள் அப்படிப்பட்ட பேரதிர்ச்சிக்குரிய நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது…

இந்தக் குழந்தை பிறப்பிற்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கொடுத்த விளக்கமும் தவறானது.
தயவு செய்து யாரும் இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்…

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *