எது சிறந்த ஜிஹாத்
—————————-
ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. ஜிஹாதில் சிறந்தது எது? என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி),
நூல் : நஸயீ 4138

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ஜிஹாதில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்று பதிலளித்தார்கள்.

அறிவப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),
நூல் : அஹ்மத் 18074

ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : அபூதாவூத் 3781

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஆட்சியாளர்களின் தவறுகளையும், அவர்களின் நியாயமற்ற போக்குகளையும் சுட்டிக்காட்டி நாவினாலும், எழுத்திக்களினாலும் தைரியமாக எதிர்ப்பதும் ஜிஹாத் தான் என்பதையும், மேலும் அது தான் சிறந்த ஜிஹாத் என்பதையும் விளங்க முடியும்.
——————————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *