கேள்வி : *உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன்* என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்?

பதில்: *ஹகீம் பின் ஹிஷாம்* (ரலி) (ஆதாரம் : புகாரி 2750)

கேள்வி : *ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்?*

பதில்: *நபி ஸாலிஹ்* (அல்குர்ஆன் 11:62)

கேள்வி : *ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள்*?

பதில்: *பெரும் சப்தத்தால்* (அல்குர்ஆன் 11:67)

கேள்வி : *பணியாளன் எதற்கு பொறுப்பாளி*?

பதில் : தன் *எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான்*. (ஆதாரம் : புகாரி 2751)

கேள்வி : *தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின் நன்மைக்கு வழிவகுத்தவர்* யார்?

பதில் : *ஸஅத் பின் உபாதா* (ரலி) (ஆதாரம் : புகாரி 2756)

கேள்வி : தனக்கு *மிகவும் விருப்பமான பைருஹா* எனும் தோட்டத்தை தர்மம் செய்தவர் யார்?

பதில்: *அபூதல்ஹா* (ரலி) (ஆதாரம் : புகாரி 2758)

கேள்வி : *வானவர்களை மனித தோற்றத்தில் கண்ட நபி இப்ராஹீம்* (அலை) என்ன ஆனார்கள்?

பதில்: *பயந்துவிட்டார்கள்* (அல்குர்ஆன் 11:70)

கேள்வி : *இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வந்த வானவர்கள்* என்ன சொன்னார்கள்?

பதில் : *நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது* என்ற நற்செய்தியை கூறினார்கள். (அல்குர்ஆன் 11:71)

கேள்வி : தம்மிடம் வந்த *வானவர்களுக்கு எந்த விருந்து வைத்தார்கள்* நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்?

பதில்: *பொரித்தக் கன்றை கொடுத்தார்கள்* (அல்குர்ஆன் 11:69)

கேள்வி : *நற்செய்தி கேட்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி* என்ன கூறினார்கள்?

பதில் : “*இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்* என்று அவர் கூறினார்.

_____________

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed