மவ்கூஃப்
———————————————-

1.عَنْ أَبِي هُرَيْرَةَ – أُرَاهُ رَفَعَهُ – قَالَ : ” أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا، وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا

உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி.! ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம் . உன் பகைவனையும் பகை.! அவனும் ஓர் நாள் உன் நண்பனாகலாம் – என்ற இந்த செய்தி -நபி ஸல் அவர்கள் கூறியதில்லை – நபித்தோழர் அபூஹுரைரா ரளி அவர்களின் சொந்தக் கூற்றாக (மவ்கூஃப்) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது –

மேலும் அலீ ரளி அவர்களின் வழியாக நபி ஸல் அவர்கள் கூறியதாக வரும் அறிவிப்பில் – அல்ஹஸன் பின் அபீ ஜஅஃபர் என்கிற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார் – எனவே இந்த செய்தி அலீ ரளி அவர்களின் சொந்தக் கூற்று ( மவ்கூஃப்) என்பதே சரியானது என்று இமாம் திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் கீழ் குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்த ஹதீஸை ஃகரீப் (அரிதான செய்தி) தரம் என்றே இமாம் திர்மிதீ அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவரங்களும் அந்த ஹதீஸின் கீழ் உள்ளது. மேலும் திர்மிதீ’யில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் குறித்து – இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் – நபித்தோழர் அபூ ஹுரைரா ரளி அவர்கள் அறிவித்த ஹதீஸே அல்ல – அலீ ரளி அவர்களின் சொந்தக் கூற்றே ஆகும்.

இதை ஹதீஸாக அல்ஹஸன் பின் அபீ ஜஅஃபர் என்பவரே அறிவித்துள்ளார் – இவர் மோசமான தவறு செய்பவர் என்று -அல்மஜ்ரூஹீன்-715’ல் கூறியுள்ளார்கள். இமாம் தபரீ அவர்கள் – தஹ்தீபுல் ஆஸார்-1725’ல் என்ற நூலில் அலீ ரளி அவர்களின் சொந்தக் கூற்று என்பதனையே – மூத்த நல்லறிஞர்களின் கூட்டத்தினர் உறுதிப்படுத்தியதாக கூறியுள்ளார்.

 

* 2- மேலும் இதே செய்தி' ஸைத் பின் அஸ்லம் என்பவர் கூறியதாக - இப்னு ஸம்ஆன் என்பவர் தனக்கு அறிவித்ததாக இமாம் இப்னு வஹ்ப் அவர்கள் - அல்ஜாமிவு ஃபில் ஹதீஸ்-227'ல் கூறியுள்ளார்கள் - ஸைத் பின் அஸ்லம் என்பவர் நபித்தோழர் அல்ல - மேலும் இவர் - மனன சக்தி இல்லாதவர் என்று - இமாம் சுஃப்யான் பின் உயய்னா அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு ஹஜ்ர் அஸ்கலானீ அவர்கள் – ஸைத் பின் அஸ்லம் என்பவரை முர்ஸல் ( தனக்கு அறிவித்த நபித்தோழரை கூறாமல் தானே நபி ஸல் அவர்கள் கேட்டதைப் போன்று ) அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்கள். முர்ஸல் அறிவிப்பில் நபித்தோழர் மட்டும் அல்ல – அவருக்கு அறிவித்த அறிவிப்பாளரும் விடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது – விடுபட்ட அறிவிப்பாளர் யார் என்றும் அறிய முடியாது – எனவே இது போன்ற செய்தி’யை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மேலும் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பாளரான இப்னு ஸம்ஆன் என்பவரை – பொய்யர் முற்றிலும் பலவீனமானவர் – என்று – இமாம் அபூ தாவூத், இமாம் ஹாகிம் இமாம் நஸாயீ உட்பட பல அறிஞர்கள் கூறுகிறார்கள் – எனவே இது பலவீனமான ஹதீஸ் ஆகிறது.

 

* 3- இதே ஹதீஸ் நபி ஸல் அவர்கள் கூறியதாக - அப்துல்லாஹ் பின் உமர் ரளி அறிவிக்கும் செய்தி - இமாம் இப்னு ஹிப்பான் அவர்களின் அல்மஜ்ரூஹீன்-1006'ல் இடம் பெற்றுள்ளது - இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள - அப்துஸ் ஸலாம் பின் ஸாலிஹ் என்பவர் பலவீனமானவர் ஆவார் - இவரை பலவீனமானவர் என்றும் பொய்யர் என்றும் - இமாம் நஸாயீ ,இமாம் உகைலீ , இமாம் அஹ்மத் பின் ஹம்பல் உட்பட பல அறிஞர்கள் கூறுகிறார்கள். இதுவும் பலவீனமான ஹதீஸ் ஆகும்.

 

*4- இதே ஹதீஸ் நபி ஸல் அவர்கள் கூறியதாக - நபித்தோழர் அபூஹுரைரா ரளி அவர்கள் அறிவிக்கும் செய்தி - இஃதிலாலுல் குலூப் லில் கராயிதீ-347'ல் இடம் பெற்றுள்ளது - இதில் இடம்பெற்றுள்ள - அல்ஹஸன் பின் வாஸில் என்பவரை - பலவீனமானவர் என்று - இமாம் அஹ்மத் பின் ஹம்பல், இமாம் பைஹகீ , இமாம் நஸாயீ உட்பட பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

*5- மேலும் இதே ஹதீஸ் – நபி ஸல் அவர்கள் கூறியதாக – அலீ ரளி அவர்களின் வழியாக – இஃதிலாலுல் குலூப் லில் கராயிதீ-352’லும் தஹ்தீபுல் ஆஸார் லில் தபரீ 1719′ லும் இடம் பெற்றுள்ள செய்தி’யில் – அல்ஹஸன் பின் அபீ ஜஅஃபர் என்பவரே இடம்பெற்றுள்ளார் – இவர் குறித்த விமர்சனங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுவும் பலவீனமான ஹதீஸ் ஆகி விட்டது.

*6- அலீ ரளி அவர்களின் சொந்தக் கூற்றாக (மவ்கூஃப்) முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-35190′ அல்அதபுல் முஃப்ரத் லில் புகாரி – 1297′ ஃகரீபுல் ஹதீஸ் லில் கர்பீ – 1932, அல்மதாலிபுல் ஆலியா பி ஸவாயிதில் மஸானீதிஸ் ஸமானிய்யா லி இப்னு ஹஜ்ர் அஸ்கலானீ-2835, தஹ்தீபுல் ஆஸார் லில் தபரீ-1720, 1722, 1723,1724 – ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

*7- அலீ ரளி அவர்கள் மிம்பரில் நின்று கொண்டு – மனிதர்களில் நபி ஸல் அவர்களுக்கு பிறகு சிறந்தவர் – அபூபக்கர் ரளி ஆவார்கள் , அதன் பிறகு உமர் ரலி ஆவார்கள் – அதன் பிறகு உள்ளவர்களைப் பற்றி – இறைவனின் தீர்ப்பளிப்பான் என்று கூறிவிட்டு – ” உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி.! ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம் . உன் பகைவனையும் பகை.! அவனும் ஓர் நாள் உன் நண்பனாகலாம் ” – என்று கூறியதாக – ஃபளாயிலுஸ் ஸஹாபா லி அஹ்மது பின் ஹம்பல் – 389’லும் அஸ்ஸுன்னா லி அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹம்பல் -1266 -லும் இடம் பெற்றுள்ளது – இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள – அபூ மஃஷர் என்பவரை – பலவீனமானவர் என்று இமாம் அபூ தாவூத் , இமாம் பைஹகீ , இமாம் நஸாயீ உட்பட பல அறிஞர்கள் கூறுகிறார்கள் – மவ்கூஃப் ஆன ஹதீஸில் பலவீனமானது ஆகும் .

  • 8- அன்ஸாபுல் அஷ்ராஃப் அல்பலாதுரீ-170 என்ற நூலில் – உஸ்மான் ரளி அவர்கள் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அலீ ரளி அவர்கள் – இன்னா லில்லாஹ் – கூறிய பிறகு – உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி.! ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம் . உன் பகைவனையும் பகை.! அவனும் ஓர் நாள் உன் நண்பனாகலாம் – என்று கூறி விட்டு –

இறைவா.! உஸ்மான் ரளி அவர்களை கொலை செய்தவர்களிடம் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று அலீ ரளி அவர்கள் கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது. மேலும் தாரீகுல் மதினா-2108 – என்ற நூலில் – உஸ்மான் ரளி அவர்கள் கொல்லப்பட்டதை அறிந்து – கீழ் காணும் வசனத்தையும் அலீ ரளி அவர்கள் ஓதினார்கள் என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது . وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ ﴿47﴾

  1. அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்குநேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன்[15:47] – ஆகவே இந்த செய்தியை நபி ஸல் அவர்கள் கூறவில்லை – அலீ ரளி அவர்களே உஸ்மான் ரளி அவர்கள் கொல்லப்பட்ட போது கூறினார்கள் என்று அறிய முடிகிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed