உனக்காக  உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால்

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் – 10610

إسناده حسن رجاله ثقات عدا عاصم بن أبي النجود الأسدي وهو صدوق حسن الحديث ، رجاله رجال البخاري عدا عاصم بن أبي النجود الأسدي روى له البخاري مقرونًا بغيره وحماد بن سلمة البصري روى له البخاري تعليقًا

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆஸிம் பின் அபுன் நஜூத் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் குறையுள்ளவர் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர் அபூஸாலிஹ் வழியாக அறிவிக்கும் செய்திகள் நிராகரிக்கப்படத்தக்கவையாக உள்ளன என சிலர் கூறியுள்ளனர்……

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-10610 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12081 , 29740 , இப்னு மாஜா-3660 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5108 , குப்ரா பைஹகீ-13459 ,

2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-1894 ,

3 . ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-578 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12082 , 29739 ,

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *