இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன?

இந்த வசனங்களில் (83:8, 83:19) இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் எனும் பதிவேடுகள் பற்றிக் கூறப்படுகிறது.

மனிதன் மரணித்தவுடன் அவனது உயிர் உடனே மேலுலகம் கொண்டு செல்லப்படுகிறது.

நல்லோரின் உயிர்கள் வானுலகம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இல்லிய்யீன் என்ற பதிவேட்டில் எழுதப்பட்டு, பின்னர் மண்ணுலகுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இது விநாடி நேரத்தில் நடந்து விடும். இதன் பிறகே மண்ணறையில் வைத்து விசாரணை நடக்கிறது.

கெட்டவனின் உயிர் வானுலகம் கொண்டு செல்லப்படும்போது ‘இவனைப் பூமியின் ஆழத்துக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஸிஜ்ஜீன் எனும் ஏட்டில் பதிவு செய்யுங்கள்’ என்று இறைவன் கூறி திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *