கேள்வி : *இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?*

பதில் : *அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள்* (அல்குர்ஆன் 16:114)

கேள்வி : *அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?*

பதில் : *பொய்யை இட்டுக்கட்டுவார்கள்* (அல்குர்ஆன் 16:105)

கேள்வி : கொடியவன் *கஅப் பின் அஷ்ரஃபை* கொன்றவர் யார்?

பதில் : *முஹம்மத் பின் மஸ்லமா* (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)

கேள்வி : *அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?*

பதில் : *அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும்* (அல்குர்ஆன் 16:106)

கேள்வி : *மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?*

பதில் : *நபி (ஸல்) அவர்கள்* (ஆதாரம் :புகாரி 3034)

கேள்வி : *பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?*

பதில் : *பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு* (அல்குர்ஆன் 16:112)

கேள்வி : *முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்*?

பதில் : *ஏமன்* (ஆதாரம் : புகாரி 3038)

கேள்வி: அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?

பதில்: *தக்வா* (இறையச்சம்) உடையவர்கள் (அல்குர்ஆன் 49:13)

கேள்வி: *குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?*

பதில்: அதை இறக்கிய *அல்லாஹ்வே அதன் பாதுகாவலன்* ஆவான். (அல்குர்ஆன் 15:9)

கேள்வி: *குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில்?* சிலவற்றைக் கூறுக:

பதில்: *அல்ஃபுர்கான்* , (2:185)

*அல்-கிதாப்* , (2: 2)

*அத்-திக்ர்* , (15: 9)

*அல்-நூர்* , (7: 157)

*அல்-ஹூதா* (2: 185)

—————————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed