*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்*

(*இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்*.

*வழிகெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்*.

“*அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே*?

*அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா*?

அல்லது *தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா?* என்று அவர்களிடம் கேட்கப்படும்.

அவர்களும், வழிகெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் *அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்*.

*உங்களை அகிலத்தின் இறைவனுக்குச் சமமாக்கியபோது அல்லாஹ்வின் மீது ஆணையாக தெளிவான வழிகேட்டில் இருந்தோம்* என்று அங்கே தர்க்கம் செய்து கொண்டே கூறுவார்கள்.

*இந்தக் குற்றவாளிகளே எங்களை வழிகெடுத்தனர். எங்களுக்குப் பரிந்துரை செய்வோர் எவருமில்லை.*

*உற்ற நண்பனும் இல்லை*.

*உலகுக்குத் திரும்பிச் செல்லுதல் எங்களுக்கு இருக்குமானால் நம்பிக்கை கொண்டோரில் ஆகியிருப்போம்* (என்றும் கூறுவார்கள்).

[அல்குர்ஆன் *26:90-102]*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *