இறைநம்பிக்கையாளருக்கு அனைத்தும் நன்மையே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து, கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

அறிவிப்பவர் : ஸுஹைப் (ரலி),

நூல் : முஸ்லிம் (5726)

நினைப்பதற்கும் நன்மை

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலேலிஅதைச் செயல்படுத்தாவிட்டாலும்லி அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (6491

நல் எண்ணத்திற்கு பெரும் கூலி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கியபோது, மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார்கள்? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அவர்கள் மதீனாவில்தான் இருக்கின்றார்கள்; அத்தியாவசியக் காரணங்கள்தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்துகொள்ளவிடாமல்) தடுத்துவிட்டன. (ஆயினும், அவர்

களது உள்ளம் நம்முடன்தான் உள்ளது) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி (4423)

ஸஹீஹ் முஸ்லிலிம் (3872) வது அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.

நன்மையில் உங்களுடன் அவர்களும் இணைந்துகொள்ளாமல் இருப்பதில்லை

கஷ்டத்திற்கும் கவலைக்கும் நன்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக

அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் :புகாரி (5641)

மனைவிக்கு உணவூட்டுவதும் நன்மை

இறைப்பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட உமக்கு நன்மையுண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி),

நூல் :புகாரி (1296)

ஹலாலான உடலுறவுக்கும் நன்மை

2376

உங்களில் ஒருவர் உடலுறவு கொள்வதிலும் தர்மம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், யிஞீஅல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா!

அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),

நூல் : முஸ்லிலிம் (1832)

அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாüலும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் :புகாரி (2989)

மலர்ந்த முகத்துடன் சந்திப்பதும் நன்மை

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (5122)

தீமையை தடுப்பதும் நன்மை

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும் என்று பதிலளித்தார்கள். நான், எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யிஞீதன் எசமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்) என்று பதிலளித்தார்கள். அ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லையென்றால்…? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள்,தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிலவற்றைக்கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?) கூறுங்கள்! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்துகொள்ளும் ஒரு நல்லறம்தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),

நூல் : முஸ்லிம் (136)

மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.

அவற்றில் (தொழில் செய்பவனுக்கு உதவி செய்க என்பதற்கு பதிலாக) யிபலவீனருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக என இடம்பெற்றுள்ளது.

அருள் புரிவதை கடமையாக்கிய இறைவன்

அருள்புரிவதை தன்மீது அவனே கடமையாக்கியுள்ளான்.

அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான்.

அல்குர்ஆன் 6:54

அருள் புரிவதைத் தன் மீது அவன் கடமையாக்கிக் கொண்டான்.

அல்குர்ஆன் 6:12

எனவே, இறைவனின் அருளை அடைவதற்கு, மேற்குறிப்பிட்ட, குறிப்பிடாத அனைத்து நன்மையான காரியங்களையும் செய்து, சுவனத்தில் உயர்ந்த சுவனமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் இடம் பிடிக்கும் நல்லடியார்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *