*இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய அத்தியாயங்கள்..!*

\\*அல்முல்கு மற்றும் அஸ்ஸஜ்தா அத்தியாயங்கள்*\\

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் *தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும் அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான்* ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள்.*

நூல் : முஸ்லிம் 2475

இந்த செய்தியில் நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் உட்பட *ஸஃப்வான் அபுஸ்ஸுபைர் ஸுஹைர் ஹசன்* மற்றும் *அபூதாவுத்* ஆக மொத்தம் ஆறு நபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

எனவே இரவில் உறங்கச் செல்லும் முன் *இவ்விரு அத்தியாயங்களை ஓதிக் கொள்வதற்கு நபிமொழியில் ஆதாரம்* உள்ளது.

\\*அல்இக்லாஸ் அல்ஃபலக் அந்நாஸ் அத்தியாயங்கள்*\\

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் *குல் ஹுவல்லாஹு அஹது, குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி ஊதிக் கொள்வார்கள்*.

பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) *தமது உடலில் இயன்ற அளவில் தடவிக் கொள்வார்கள். பிறகு தமது உடலின் முன் பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் .*

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி); நூல் புகாரி (5017)

\\*ஆயத்துல் குர்சி*\\

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார் . காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கவே மாட்டான் .*

அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி); நூல் புகாரி ( 3275 )

\\*அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்கள்*\\

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக ஆகிவிடும்* ,

அறிவிப்பவர் அபூ மஸ்வூத் ( ரலி); நூல் புகாரி ( 4008 )

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *