இம்ரான்
இவர் ஈஸா நபியின் தாயாரான மர்யம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை.
இல்யாஸ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இல்யாஸீன் என்று 37:130 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். 37:123, 6:85 வசனங்களில் இவரைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.
இஸ்தப்ரக்
இஸ்தப்ரக் என்பது சொர்க்கத்தில் அணிவிக்கப்படும் ஒரு வகைப் பட்டாடையின் பெயராகும். இது பட்டாடைகளில் அதிக அடர்த்தி உடையதாகும். இது பற்றி 18:31, 44:53, 76:21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.)