இவ்வசனங்களில் (9:114, 14:41, 19:47, 26:86, 60:4) இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புக் கோரியதாக இறைவன் கூறுகிறான்.

இதை முன்மாதிரியாகக் கொண்டு இணைகற்பித்தவர்களுக்கும், இறைவனை அடியோடு நிராகரித்தவர்களுக்கும் பாவமன்னிப்புக் கோரலாம் என்று கருதக் கூடாது.

ஏனெனில் 60:4 வசனத்தில் “இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடிய விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களில் தான் அவரிடம் முன்மாதிரி இருக்கிறது” எனக் கூறப்படுகிறது.

9:114 வசனத்தில் “தமது தந்தை இறைவனின் எதிரி என்பதை அறிவதற்கு முன்னால் அவருக்காக இப்ராஹீம் பாவமன்னிப்புத் தேடினார்; தமது தந்தை இறைவனின் எதிரி என்பது தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார்” எனக் கூறப்படுகிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed