ஆலிம்கள் என்றால் யார்❓

ஆலிம்களின் தகுதிகள் என்னன்ன❓

என்பதை அல்லாஹ் தமது திருமறையில் கூறுகிறான்

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (29:49).

கல்வி கற்றோரது உள்ளத்தில் இந்த குர்ஆனின் போதனைகள் இருப்பதாக அல்லாஹ் சொல்கிறான்.
எவரிடம் இந்த போதனை தன் உள்ளத்தில் இல்லையோ அவர் மார்க்க அறிஞராக மாட்டார் என்பது இந்த வசனம் கூறுகின்ற அளவுகோல்.

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதையும், அவனுக்கு யாரையும் எதையும் இணையாக்க கருதக்கூடாது என்கிற அடிப்படையையும் யார் மனதில் நிறுத்தவில்லையோ அவர் எத்தனை பெரிய அறிவாளி என்று பெயரெடுத்தவராக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை, அவர் அல்லாஹ்வின் பார்வையில் ஆலிமும் இல்லை

தனிமையில் இருக்கும் போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலை நாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது. (35:18)

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ அவரே அறிந்தவர் என்பதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

ஆனால், இன்று உலமாக்கள் என்று சொல்வோர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்களா?

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது,
அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (2:75)

என்று சஹாபாக்களைப் பார்த்து அல்லாஹ் கேட்கச் சொல்கிறான்.
சத்தியம் இது தான் என்று அறிந்த பிறகும் அதை திரித்தும் மறைத்தும் அதற்கு எதிராய் செயல்படுகிறார்களே, அவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் மகா கெட்டவர்கள்.

இவர்கள் அல்லாஹ்வை புரிந்திருக்கிறார்களா? புரிய வேண்டிய விதத்தில் புரிந்திருக்கிறார்களா? அல்லாஹ்வின் சிஃபத் என்றால் என்ன, மனிதனின் தகுதி என்றால் என்ன, அல்லாஹ்வின் தகுதியை மனிதனின் தகுதியோடு ஒப்பிட முடியுமா? என்பன போன்ற அடிப்படைகளிலெல்லாம் எந்தவொரு ஞானமும் அற்றவர்களாய் இருக்கும் இவர்கள் எப்படி அறிஞர்கள் ஆவார்கள்?
பெயருக்குப் பின்னால் மதனி என்றும், பாகவி என்றும் உலவி என்றும் பட்டம் இட்டுக் கொள்வதாலோ, தலைப்பாகையையும் ஆளுயர ஜுப்பாக்களை அணிந்து நம்மிலிருந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருவதாலோ மார்க்க அறிஞர் ஆகி விட மாட்டார்.
அல்லாஹ்வைப் பற்றிய சரியான புரிதலும், அவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய ஈமானும் இருக்க வேண்டும்.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது, அன்றைய யூதர்கள், பாமரர்களை இழிவாய் கருதியதைப் பற்றி சொல்கிறான் நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர்.

நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். (3:75)

மக்களை இழிவாய் கருதுவது யூதர்களின் குணம், அல்லாஹ்விடத்தில் கடுங்குற்றமாக கருதப்படும் குணம்.

மார்க்கத்தை கேலிக்கூத்தாக்கியும், இஸ்லாம் எதையெல்லாம் தடுத்திருக்கிறதோ அதிலெல்லம் தமது பங்களிப்பை செய்தும் மார்க்கத்தை கேலிக் கூத்தாக்குவோர் எப்படி மார்க்க அறிஞராக இருக்க முடியும்?

வட்டிக் கடை திறப்பு விழாவுக்கு சென்று அல் ஃபாத்திஹா ஓதுகிறான்.
பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணையை வாங்கி மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்து விட்டு அந்த மேடையில் ஃபாத்திஹா ஓதுகிறார்கள்.

இன்னும் ஏராளமான மார்க்க விரோத காரியங்களில் ஈடுபட்டால் இவரை ஆலிம் என்று இஸ்லாம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது !
————————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *