அழைப்புப் பணி
—————————
அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லி­ம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்
அல்குர்ஆன் (41:33)

பெருமானார் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் மக்கள் திரண்டிருந்த நேரத்தில் நான் உங்களுக்கு இம்மார்க்கத்தை எத்திவைத்துவிட்டேன். சிறிய செய்தியாக இருந்தாலும் அதை என்னிடமிருந்து மக்களுக்கு நீங்கள் எத்திவைத்துவிடுங்கள் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதை(பிறருக்கு)எடுத்துரையுங்கள்.


அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­),
நூல் : புகாரி 3461

அன்றைய அரபுகளில் ஒட்டகங்களில் உயர்ந்த ரக ஒட்டகமான செந்நிற ஒட்டகத்தை மதிப்பிட்டிருந்தார்கள். ஒருவர் செந்நிற ஒட்டகத்தை வைத்திருந்தால் அது அவருக்குப் பெருமையாக இருக்கம். இதை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல் : புகாரி 4210

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ! அவருக்கு அதை பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூ­லி­ கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதை செய்தவர்களின் கூ­லி­யிருந்து கொஞ்சம் கூட குறைத்துவிடாது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லி­ம் 4831
———————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed