*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்*
—————————————————
அளவற்ற அருளாளனின் அடியார்கள் *பூமியில் பணிவாக* நடப்பார்கள்.

தம்முடன் *அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறி* விடுவார்கள்.

அவர்கள் தமது இறைவனுக்காக *ஸஜ்தாச் செய்தும், நின்றும்* இரவைக் கழிப்பார்கள்.

*”எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது”* என்று அவர்கள் கூறுகின்றனர். அது *மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும்* இருக்கிறது.

அவர்கள் *செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே* அது இருக்கும்.

அவர்கள் *அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள்*.

அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் *தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்*.

*விபச்சாரம் செய்ய மாட்டார்கள்*. இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். *கியாமத் நாளில் வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும்*. அதில் *இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத்* தங்குவான்.

*திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர*. அவர்களது *தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக* மாற்றுகிறான்.

அல்லாஹ் *மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும்* இருக்கிறான்.

திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.

அவர்கள் *பொய் சாட்சி கூற மாட்டார்கள்*.

*வீணானவற்றைக் கடக்கும்போது கண்ணியமாகக்* கடந்து விடுவார்கள்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் *அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்*.

*”எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!”* என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் *சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை* வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள். *அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது அழகிய தங்குமிடமாகவும், ஓய்விடமாகவும்* உள்ளது.

*📚அல்குர்ஆன்:* [25:63-76]

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed