அல்லாஹுவின் அருளை பெற்றுத்தரும் ஸுப்ஹுத் தொழுகை..

அதிகாலை சுபுஹூ தொழுகைக்கு செல்லும் ஒரு மனிதனை பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை

நபி (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவனைப்பு அத்தனையும் உதரிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனை பார்த்து இறைவன் வியப்படைந்து வானவர்களிடம் கேட்கிறான்.

வானவர்களே எனது இந்த அடியானை பாருங்கள் !!

படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவணைப்பு அத்தனையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான்.

எதற்காக ??

என்ன வேண்டும் இந்த அடியானுக்கு ??

*எனது அருள் மீது ஆசை வைத்தா?? *
*எனது தண்டனையை பயந்தா?? *

பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகிறான்.

உங்களை சாட்சி வைத்து கூறுகிறேன் : அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சியம் கொடுப்பேன். அவன் எதை பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சியம் அவனுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்

عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

عَجِبَ رَبُّنَا عَزَّ وَجَلَّ مِنْ رَجُلَيْنِ : رَجُلٍ ثَارَ عَنْ وِطَائِهِ وَلِحَافِهِ مِنْ بَيْنِ أَهْلِهِ وَحَيِّهِ إِلَى صَلَاتِهِ، فَيَقُولُ رَبُّنَا : أَيَا مَلَائِكَتِي، انْظُرُوا إِلَى عَبْدِي، ثَارَ مِنْ فِرَاشِهِ وَوِطَائِهِ وَمِنْ بَيْنِ حَيِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، وَرَجُلٍ غَزَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَانْهَزَمُوا، فَعَلِمَ مَا عَلَيْهِ مِنَ الْفِرَارِ وَمَا لَهُ فِي الرُّجُوعِ، فَرَجَعَ، حَتَّى أُهَرِيقَ دَمُهُ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَلَائِكَتِهِ : انْظُرُوا إِلَى عَبْدِي رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِي، وَرَهْبَةً مِمَّا عِنْدِي حَتَّى أُهَرِيقَ دَمُهُ “.
حكم الحديث: إسناده حسن إلا أن الدار قطني صحح وقفه

Narrated: Ibn Mas’ud

Musnad Ahmed le 3949,ibn hibban 2621,

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *