அய்யூப்
பல்வேறு நோய்களாலும் வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர் – 21:83-84, 38:41-44
பொறுமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படும் இவரைப் பற்றி இதைத் தவிர வேறு விபரங்கள் கூறப்படவில்லை. அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்று கட்டுக்கதைகள் தான் உள்ளன. அவற்றுக்குச் சான்று ஏதுமில்லை.