அடக்கஸ்த் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல்

ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். ‘எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா? அவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’ என்றார்கள். அவரது அடக்கத்தலம் வந்து அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 458, 460, 1337

இந்தக் கருத்து புகாரி 857, 1247, 1321, 1340 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவரது ஜனாஸா தொழுகையில் நாம் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவரது அடக்கத்தலம் சென்று அதன் முன்னே நின்று தொழுகை நடத்தலாம் என்று இதனடிப்படையில் சிலர் வாதிக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்து காட்டியிருந்தால் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் இது சரியான நிலை போல் தோன்றினாலும் இதைப் பொதுவான நிலைபாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் சிறப்புத் தகுதி உடையவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் அவர்களின் துஆவுக்கு அதிக சக்தி உள்ளது. தனது துஆ தன் காலத்தில் தன்னோடு வாழ்ந்த யாருக்கும் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற தகுதியின் அடிப்படையில் இவ்வாறு தொழுகை நடத்தினார்களா? அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தினார்களா? என்று ஆராய வேண்டும். தூதர் என்ற சிறப்புத் தகுதிக்காக இவ்வாறு அவர்கள் செய்திருந்தால் அதில் நாம் போட்டி போடக் கூடாது.

‘இந்தக் கப்ருகள் இதில் அடக்கப்பட்டவர்களுக்கு இருள் நிறைந்ததாக உள்ளன. நான் அவர்களுக்குத் தொழுவதன் மூலம் அவர்களது கப்ருகளை அல்லாஹ் ஒளிமயமாக்குகிறான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் (ரலி)

நூல்கள்: நஸயீ 1995, இப்னுமாஜா 1517

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் என்ற தகுதியின் காரணமாகவே ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு மீண்டும் தொழுகை நடத்தியுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டிருந்தாலும் தமது தொழுகைக்கு ஒரு சிறப்பு உள்ளது என்ற காரணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் இது நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உரிய தனித் தகுதியாகும்.

ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு என் தொழுகையால் அருள் கிட்டும் என்று சொல்லும் தகுதி இந்த உம்மத்தில் எவருக்கும் இல்லை என்பதால் கப்ரில் போய் ஜானாஸா தொழுகை நடத்தக் கூடாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed