Category: Quran & Hadith Images

ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு உதவிக்காக வந்திருந்தார். அவர் உதவியைப் பெற்றுக்கொண்ட பின், நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உமக்கு கணவர் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்…

மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும்.
இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 3:185
ஏக இறைவனை மறுப்போர் ஊர்கள் தோறும் சொகுசாக திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகளே பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். தங்குமிடத்தில் அது கெட்டது.
அல்குர்ஆன் 3:196,197
இவ்வுலகின் வசதி குறைவு தான். இறைவனை அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது.
அல்குர்ஆன் 4:77
மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
அல்குர்ஆன் 9:38
மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 13:26
இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.
அல்குர்ஆன் 40:39
நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கின்றீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும்.
அல்குர்ஆன் 87:16,17
இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.

நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் 39:10

“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சம் உடையவரே” என்று பதிலளித்தார்கள்.

கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு, மனிதர்களில் சிறந்தவர் எவரது ஆயுள் நீண்டதாகவும், நல்லமல்கள் அழகானதாகவும் இருக்கின்றதோ அவர்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நாவிலிருந்தும் கரத்தில் இருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.

(ஏக இறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?
[அல்குர்ஆன் 73:17]

இக்குழந்தை பிறந்திருந்தாலும். இக்குழந்தையின் செய்தியை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் இணைத்து தவறான விளக்கம் தரக்கூடிய பொருத்தமற்ற பதிவாக உள்ளது. மேலும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் பொருத்தமற்ற பதிவு மட்டுமல்ல இதை பகிர்வதன்…

உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்கு மிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 60:7)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையானது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்ட தாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மையவாடிக்குச் சென்று ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் லலாஹிகூன். அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச் சாந்தி பொழியட்டும்! இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தான்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.
அல்குர்ஆன் 13:25