Category: Quran & Hadith Images

உருவப் படம் உள்ள வீட்டிற்குள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தை வரைந்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும், நீ படைத்தவற்றுக்கு உயிர் கொடு’ என்று அல்லாஹ் சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா

மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.’

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள்

(அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?” எனக் கேட்டார். “நீர்,ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும்.

மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும் . இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும்

இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால், எங்கள் நிலையோ தங்களின் நிலையைப் போன்றதன்று’ என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை

You missed