Category: குர்ஆன் விளக்கங்கள்

தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (48:29) கூறப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத அனைவரிடமும் கடுமையாக நடக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்)…

பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?

பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா? இவ்வசனத்தில் (54:19) பீடை நாளில் ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இஸ்லாத்தில் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் உள்ளன என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வசனத்தின் சரியான…

மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?

மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? இவ்வசனத்தில் (38:69) மேலான கூட்டத்தார் விவாதம் செய்தபோது நீர் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவுரையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆயினும் அடுத்தடுத்த வசனங்களைக் கவனித்தால் இவ்வசனம் கூறுவது என்ன என்பதை விரிவுரை ஏதும்…

அல்லாஹு அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

அல்லாஹு அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான். அந்த வசனங்கள் வருமாறு: 16:72, 19:68, 25:44, 37:1, 37:2, 37:3, 43:2,…

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? இவ்வசனத்தில் (33:50) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி…

பிரச்சாரத்திற்குக் கூலி

பிரச்சாரத்திற்குக் கூலி மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக யாரிடமும் எந்தக் கூலியும் கேட்கக் கூடாது என்று பல வசனங்களில் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. பிரச்சாரம் செய்வதற்காக மக்களிடம் எதையும் எதிர்பார்க்க்க் கூடாது என்றாலும் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று இவ்வசனத்தில் (42:23) கூறப்படுகிறது.…

பிறர் வீடுகளில் சாப்பிடுதல் இவ்வசனம் (24:61) உரிமையுடன் யாருடைய இல்லங்களில் ஒருவர் சாப்பிடலாம் என்பதைக் கூறுகிறது. இவ்வசனத்துக்கு விளக்கம் கொடுக்கும் பல விரிவுரையாளர்கள் போரில் பங்கெடுக்காமல் இருப்பது குற்றமில்லை என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக அவர்கள் 48:17 வசனத்தை எடுத்துக் காட்டுகின்றனர். 48:17 வசனம் போர்க்களம் பற்றிக் கூறுவது உண்மையானாலும் 24:61 வசனம் போர்க்களம் பற்றிப் பேசவில்லை. இரண்டு வசனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். “உண்பது குற்றமில்லை” என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கும்போது போருக்குச் செல்லாமல் இருப்பது குற்றமில்லை என்று இவர்கள் கருத்துக் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வசனம் பிறர் வீட்டில் உண்பது பற்றிய ஒழுங்குகளைத்தான் பேசுகிறது. ஒரு மனிதன் மற்றொரு குடும்பத்தாரோடு கலந்து உண்ணலாமா? என்ற கேள்விக்குத்தான் இவ்வசனம் விடையளிக்கிறது. ஒரு மனிதன் தனது பெற்றோர் வீட்டில் அவர்களுடன் உண்ணலாம். அது போல் சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் உடன் பிறந்தவர்கள், தாயின் உடன் பிறந்தவர்கள் போன்ற உறவினர்கள் வீட்டில் ஆண்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்தும், தனியாகவும் உண்ணலாம். அதுபோல் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து உணவு உட்கொள்வது குற்றமில்லை. அது போலவே நெருங்கிய உறவினராகவோ, உற்ற நண்பராகவோ இல்லாத குருடரையும், ஊனமுற்றோரையும், நோயுற்றவர்களையும் நம்முடன் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் இவ்வசனம் கூறும் தெளிவான கருத்தாகும். அன்னிய ஆண்களும், பெண்களும் தனித்திருப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆயினும் நெருங்கிய உறவினர்கள் கூட்டாகச் சேர்ந்து உண்ணலாம்; அது குற்றமாகாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இஸ்லாம் தடை செய்துள்ள வகையில் ஆடை அணிகலன்கள் அணிந்து வருவதையும், ஆணும், பெண்ணும் ஒட்டி உரசுவது போன்றவைகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் இவ்வசனத்திலிருந்து நேரடியாகப் பெறப்படும் கருத்தாகும். இவ்வசனம் கூறாத கருத்தை விரிவுரை என்ற பெயரில் யார் கூறினாலும் அதை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை

பிறர் வீடுகளில் சாப்பிடுதல் இவ்வசனம் (24:61) உரிமையுடன் யாருடைய இல்லங்களில் ஒருவர் சாப்பிடலாம் என்பதைக் கூறுகிறது. இவ்வசனத்துக்கு விளக்கம் கொடுக்கும் பல விரிவுரையாளர்கள் போரில் பங்கெடுக்காமல் இருப்பது குற்றமில்லை என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக அவர்கள் 48:17 வசனத்தை…

மூஸா நபி செய்த கொலை

மூஸா நபி செய்த கொலை 20:40, 26:14, 28:15, 28:16, 28:19 ஆகிய வசனங்களில் மூஸா நபியவர்கள் ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இது நடக்கும்போது அவர்கள் இறைத்தூதராக இருக்கவில்லை. மேலும் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் தாக்கவும்…

துல்கர்னைன் நபியா?

துல்கர்னைன் நபியா? இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன், இத்தடுப்பு…

பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை

பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை இவ்வசனத்தில் (3:36) மர்யம் அவர்களுக்கு அவர்களின் தாயார் பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது. மர்யம் (அலை) அர்களின் தாயார் தமது குழந்தையை இறைப்பணிக்காக அர்ப்பணம் செய்ய நேர்ச்சை செய்தபோது ஆண் குழந்தை பிறக்கும் என்ற எண்ணத்தில் நேர்ச்சை…

மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?

மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா? இவ்வசனத்தில் (71:27) “இவர்களை விட்டு வைத்தால் மக்களை வழிகெடுப்பார்கள்; பாவியைத்தான் பெற்றெடுப்பார்கள்” என்று நூஹ் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் கூட நல்லவராக மாற மாட்டார்கள் என்றும் அவர்கள் பெற்றெடுக்கும் சந்ததிகளும் பாவிகளாக இருப்பார்கள்…

நரகின் எரிபொருட்கள்

நரகின் எரிபொருட்கள் அல்லாஹ்வையன்றி யாரை, அல்லது எதை வணங்கினார்களோ அவர்கள் நரகின் எரிபொருட்களாவர் என்று இவ்வசனத்தில் (21:98) கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர எதை வணங்கினாலும் எவரை வணங்கினாலும் அவர்களும் நரகில் போடப்படுவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. வணங்கியவர்கள் நரகில் போடப்படுவதை நாம்…

களாத் தொழுகை

களாத் தொழுகை இவ்வசனத்தில் (19:60) தொழுகையை விட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிக் கூறப்படுகிறது. பல வருடங்களாக, பல மாதங்களாக தொழுகையை விட்டவர்கள் திடீரென்று திருந்தி வாழ விரும்புவார்கள். இவர்கள் விட்டுவிட்ட பல வருடங்களின் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது இவர்கள்…

அச்சம் தீர வழி

அச்சம் தீர வழி இவ்வசனங்களில் (28:31,32) கைத்தடியைப் பாம்பாக மாற்றுதல், கையில் இருந்து வெளிச்சம் வருதல், பயத்தின்போது இரு கைகளையும் ஒடுக்கி பயத்திலிருந்து விடுபடுதல் ஆகிய அற்புதங்கள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து “இவ்விரண்டும் அற்புதங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.…

மலட்டுக் காற்று

மலட்டுக் காற்று இவ்வசனத்தில் (51:41,42) மலட்டுக் காற்றின் மூலம் ஒரு சமுதாயத்தை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. காற்றில் எப்படி மலட்டுத் தன்மை இருக்கும் என்று நாம் நினைக்கலாம். காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்றவை இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள…

கருவுற்ற சினை முட்டை

கருவுற்ற சினை முட்டை இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும்போது அலக், அலக்கத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்…

களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை

களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)யின் மீது சுமத்தப்பட்ட களங்கமாகும். இவ்வாறு அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பார் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தை…

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? இவ்வசனத்தில் (5:6) “பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல் எனவும், தாம்பத்தியம் எனவும் இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில்…

மிஃராஜ் பற்றி குர்ஆன்

மிஃராஜ் பற்றி குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் வின்னுலகம் சென்று திரும்பினார்கள். இது மிஃராஜ் பயணம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் 17:1 வசனத்தில் மக்காவில் இருந்து ஜெருசலம் வரை நபிகள்…