*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 244* ||

அத்தியாயம் 39 – [அஸ்ஸுமர்(கூட்டங்கள்) ) 31~75 வசனம் வரை]
_________________________________
1 ) நபி(ஸல் ) அவர்களும், அவர்களை பின்பற்றியவர்களே முத்தக்கீன்கள் எனக்கூறும் வசனம் எது?

*உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மையென்று நம்பியவரும்* ஆகிய இவர்களே இறைச்சமுடையவர்கள்.(39:33)
_________________________________
2 ) உயிர்கள் எப்போதெல்லாம் கைப்பற்றபடுகிறது?

*உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காமல் உறக்கத்தில் இருக்கும்போதும்* அவற்றை அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். (39:42)
_________________________________
3 ) ஃபஜ்ர் தொழுகையை , சூரியன் நன்கு உதயமான பின் தொழுவதற்க்கு எப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது?

*தம்மையும் மீறிக் கண்ணயர்ந்து உறங்கினால்*
_________________________________
4 ) பாவம் செய்யும் தன் அடியார்களுக்கு கருணையாளன் கூறுவது என்ன?

*அல்லாஹ்வின் அருளில் விரக்தியடைந்து விடாதீர்கள்! அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான்*. அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன் (39:53)
_________________________________
5 ) ரப்பிடம் இருந்து அருள்பட்ட அழகானதை எதற்க்கு முன்னதாக பின்பற்றமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

நீங்கள் அறியாத விதத்தில் *திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னர்* (39:55)
_________________________________
6 ) ஜாஹிலியாக்கள்(அறிவீனர்கள்) எதை ஏவுகிறார்கள்?

*அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று*. ( ஆதாரம் – 39:64)
_________________________________
7 ) அந்நாளில் அல்லாஹ் வானங்களையும், பூமியையும் தனது கரங்களில் வைத்துக்கொண்டு என்ன கேட்பான்?

*நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்?* என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (4812), முஸ்லிம் (5375)
_________________________________
8 ) அல்லாஹ் படைப்பினங்களை எதைவைத்து மீண்டும் படைப்பான்?

*அதுதான் (முதுகந்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்* என்று மேலும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸாலிஹ், நூல்கள்: புகாரி (4935), முஸ்லிம் (5660)
_________________________________
9 ) நரக காவலாளிகள் நரகவாசிகளிடம் என்ன கேட்பார்கள்?

*உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்கு எடுத்துரைத்து, உங்களது இந்த நாளின் சந்திப்பைப் பற்றி உங்களை எச்சரிக்கும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா?* (39:71)
_________________________________
10 ) அஸ்ஸுமர் (கூட்டங்கள்)என்ற இந்த அத்தியாத்தின் தலைப்பு எந்த வசனங்களில் உள்ளது?

இறைமறுப்பாளர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தை நோக்கி ஓட்டிச் செல்லப்படுவார்கள். (39:71)

தமது இறைவனை அஞ்சியோர் கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்கள். (39:73)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *