அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 202* ||
அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (51~60)]
__________________________________
__________________________________
1 ) *நபிகளாரின் இரண்டு முக்கியப் பணிகள் யாவை?* *இறைமறுப்பாளர்களுக்கு எதிராக நபிகளார்* எதன் மூலம் கடுமையாகப் போராட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான் ?
நபிகளார் *நற்செய்தி கூறுபவர்களாகவும், எச்சரிக்கை செய்பவர்களாகவும்* இருக்கிறார்கள்.
மேலும், அவர்கள் *குர்ஆனின் மூலம் இறைமறுப்பாளர்களுடன் கடுமையாகப் போராட வேண்டும்* என்று அல்லாஹ் கூறுகிறான் (25:56, 25:52)
__________________________________
2 ) *தூதர்கள் தனது பிரச்சாரப் பணிக்கு கூலியாக* மக்களிடம் கேட்பது என்ன?
தனது *இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள* விரும்புபவரைத் தவிர (அதாவது, *மக்கள் நேர்வழி பெறுவதைத்தவிர*) வேறு எந்தக் கூலியையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை (25:57)
__________________________________
3 ) *இரண்டு கடல்களைப் பற்றி அல்லாஹ் கூறும் அற்புதம்* என்ன?
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான். ஒன்று, *மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர்*. (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) *இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும்* ஏற்படுத்தி இருக்கிறான்.
(25:53)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*