அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 154* ||
அத்தியாயம் 16
[ஸுரா *அந் நஹ்ல் -தேனீ* ) வசனம் 111- 128 வரை]
1) *சூரா அந்-நஹ்ல் (16)-ல் உள்ள 111-113 வசனங்களின் முக்கிய *கருப்பொருள்* என்ன?
(i) *மறுமை நாளில் ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்பது*,
(ii) *அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாததால் ஏற்படும் விளைவுகள்*,
(iii) *தூதர்களை புறக்கணித்ததற்கான தண்டனை* (16:111-113).
2 ) *இறைநம்பிக்கையாளர்களின் செயல்கள் குறித்து* அல்லாஹ் அறிவுறுத்துவது என்ன?
அல்லாஹ் வழங்கிய *அனுமதிக்கப்பட்ட, நல்ல உணவை உண்ணவும்*, அவனுக்கு நன்றி செலுத்தி *அவனை மட்டுமே வணங்கவும்* அறிவுறுத்துகிறான் (16:114).
3) *சாப்பிட அனுமதிக்கப்பட்ட உணவு* குறித்து என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது?
*தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர் பெயர் கூறப்பட்டவை தடை செய்யப்பட்டுள்ளன; பொய் கூறி அனுமதியை மாற்றக் கூடாது* என எச்சரிக்கிறான் (16:115-116)
4) *நபி இப்றாஹிம் (அலை) பற்றி அல்லாஹ் தரும் சான்றுகளை* விவரிக்கவும்?
*இப்ராஹீம் நபி ஒரு சமுதாயமாக, அல்லாஹ்வுக்கு பணிந்து, சத்தியத்தில் நிலைத்து, இணைவைப்பை தவிர்த்தவராக அல்லாஹ்வின் உவப்பை பெற்று ஏகத்துவ தந்தையாக வாழ்ந்து மரணித்தர்கள்*
(16:120).
5) *அறியாமலேயே பாவங்களைச் செய்பவர்களுக்கு* என்ன உறுதிமொழி வழங்கப்படுகிறது?
*அறியாமல் பாவம் செய்து, பின்னர் மன்னிப்பு கேட்டு சீர்திருத்தினால், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், அன்பாளனாகவும் இருப்பான்* என உறுதியளிக்கிறான் (16:119).
6 ) *நபி (ஸல்) அவர்களை யாரை பின்பற்ற அல்லாஹ் சொல்கிறான்?* *எதனால் பின்பற்ற அல்லாஹ் சொல்கிறான்*?
அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை *இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப்* பின்பற்றுமாறு சொல்கிறான் இப்ராஹீம் (அலை) *சத்திய நெறியில் நின்றவர் மற்றும் இணைவைப்போரில் ஒருவராக இல்லை* (16:123).
7 ) *அழைப்பு பணியின்* வழிவகையினை விவவரிக்கவும்?
*விவேகத்துடனும், அழகான அறிவுரையுடனும்* இறைவனின் பாதைக்கு அழைக்க வேண்டும்
விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால்
*சிறந்த முறையில் விவாதிக்க வேண்டும்*
(16:)
8 ) *பலிக்கு பலியின் அளவீடு என்ன*? மக்கா வெற்றியின் போது *நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு* கூறியது என்ன?
நீங்கள் *எந்த அளவு துன்புறுத்தப்பட்டீர்களோ அதே அளவு தண்டிக்கலாம், ஆனால் பொறுத்தல் சிறந்தது* (16::126).
மக்கா வெற்றியில் நபி (ஸல்): “நால்வரைத் தவிர மற்றவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள் (திர்மிதீ: 3054, அஹ்மத்: 20280).
9 ) *அல்லாஹ்வின் உதவி என்ன? அல்லாஹ் யாருடன் இருக்கிறான்*?
அல்லாஹ்வின் உதவியால் மட்டுமே *பொறுமையாக இருப்பது* சாத்தியமாகிறது.
*இறையச்சமுடையோர் மற்றும் நன்மை செய்வோருடன்* அல்லாஹ்
இருக்கிறான் (16:127,128)
10 ) *பனு இஸ்ராயில் சமுதாயத்தின் புனிதமான நாள்*?
*சனிக்கிழமை* (16:124)
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*