அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 146* ||

அத்தியாயம் 15 [*ஸுரா அல் ஹிஜ்ர்(ஓர் ஊரின் பெயர்))* வசனம் 21- 40 வரை]

1) மனிதன் மற்றும் ஜின்னின் மூலப்பொருட்கள்…

மனிதன்: *மாற்றப்பட்ட கருப்பு களிமண்ணால்* படைக்கப்பட்டான் (15:26)

ஜின்: *கடும் வெப்பமான நெருப்பால்* படைக்கப்பட்டது (15:27)

2 ) *வானவர்களுக்கும் இப்லீஸுக்கும் இட்ட கட்டளை*

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம்பணிந்து (ஸஜ்தா) வணங்குமாறு கட்டளையிட்டான்.

*வானவர்கள் அனைவரும் கட்டளைக்கு கீழ்ப்படிந்தனர்* (15:30)

3 ) இப்லீஸ் என்கிற ஷைத்தான் *அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாததுக்கு* காரணம் என்ன?

அவனது *அகங்காரமும் பெருமையும்*

*மாற்றப்பட்ட கருப்புக் களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு நான் பணியப் போவதில்லை* என்று கூறி மறுத்தான்

(அல் குர்ஆன் 15:33)

(7: 12) *தன்னை நெருப்பால் படைக்கப்பட்டவன் என்றும், ஆதமை மண்ணால் படைத்ததால் தான் அவரை விட மேலானவன்* என்ற *அகந்தையால் மறுத்தான்*

4 ) இப்லீஸை வழிகேட்டில் விட்டது யார்?

*இப்லீஸை வழிகேட்டில் விட்டது அல்லாஹ் தான்*.  இப்லீஸ் தன் இறைவனிடம், “*என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால்*” என்று கூறுகிறான்.

(15:39)

5 ) *எதனை யாருக்கு அழகாக்கி காட்டுவதாக இப்லீஸ் அல்லாஹ்விடம் கூறினான்*?

*பூமியில் உள்ள தீய செயல்களை மனிதர்களுக்கு அழகாக காட்டுவதாக கூறினான்* (15:39-40)

*அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர மற்றவர்களை வழிகெடுப்பதாக கூறினான்*

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *