அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 132* ||

அத்தியாயம் [ *12 யூஸூஃப் (இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 71- 80 வரை.]

1 ) *யூஸுப் நபி தனது சகோதரனை தன்னிடம் கைபற்றி கொள்வதற்காக* சகோதரனின் பொதியில் மன்னரின் அளவு குவளையை வைக்கும் தந்திரத்தை ஏன் கையாள வேண்டும்?

(12:76) இந்த தந்திரம் மூலம், *யூஸுப் நபி தனது சகோதரனை அந்நாட்டின் சட்டப்படி தன்னிடம் வைத்துக் கொள்ள முடிந்தது*.

இது அல்லாஹ்வின் திட்டத்தின் ஒரு பகுதியாகும், ஏனெனில் இறுதியில் இது அவரது *முழு குடும்பத்தையும் வரவழைத்து, யஃகூப் நபியை மீண்டும் யூஸுப் நபியுடன் சேர்த்தது* (12:99-100).

இதை வசனம் 12:76ல் *இவ்வாறே நாம் யூஸுஃபுக்காக யுக்தியைக் கையாண்டோம்* என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

2 ) *ஒவ்வொரு அறிஞர் (உலமா) க்கும் மேல் ஒரு அறிஞர் உள்ளார்* என கூறும் வசனம் எது?

(21:76) *ஒவ்வொரு அறிந்தவனுக்கும் மேல் மிக அறிந்தவன் இருக்கிறான்*.
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *