*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 46* ||
[அத்தியாயம் 5 (*அல்மாயிதா* – உணவு தட்டு) வசனம் *91-100* வரை]
நேற்றைய (15/11/24) கேள்வி 15 க்கான பதில்.
1) *அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும்.* என நபி ஸல் கூறிய உணவு எது?
*‘கொழுப்புத் தலை திமிங்கலம்*’ (அம்பர்)
( நபித்தோழர்களின் தியாகத்திற்க்காக அல்லாஹ் வழங்கிய உணவு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்கொள்ள ஒருபடைப் பிரிவில் எங்களை அனுப்பினார்கள்.
எங்களுக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்.
ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குத் தருவதற்கு அவர்களிடம் வேறெதுவும் இல்லை. அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்து வந்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் கூறுகிறார்:
நான் (ஜாபிர் – ரலி அவர்களிடம்) *அதை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள்? (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே?)* என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம். அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக் கொள்வோம். அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாயிருக்கும்.
நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் கருவேல மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம். பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம்.
பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம்.
அங்கே ‘*கொழுப்புத் தலை திமிங்கலம்*’ (அம்பர்) கிடந்தது.
(தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் “*செத்ததாயிற்றே*?” என்று கூறினார்கள். பிறகு “*இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, (இதை) உண்ணுங்கள்*” என்று கூறினார்கள்.
அந்தத் திமிங்கலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் *ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது*. நாங்கள் அந்தத் திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதின்மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் அமர வைத்தார்கள்.
மேலும், அதன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை(ப் பூமியில்) நட்டு வைத்தார்கள். பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்து போனார்கள். (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை. அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து.)
பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேக வைத்துப் பயண உணவாக எடுத்துக் கொண்டோம்.
நாங்கள் மதீனா வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “*அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும். அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்களேன்*!” என்று கேட்டார்கள்.
உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அவர்கள் உண்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: முஸ்லிம் (3915), புகாரி (2483)
2) *தண்டிப்பதில்* அல்லாஹ் கடுமையானவன் ( 5:98)
3) *பகை, வெறுப்பு ஆகியவற்றை உண்டாக்கும் காரணிகளாக* எது உள்ளது?
*ஷைத்தான் மதுவின் மூலமும், சூதாட்டத்தின் மூலமும்* உங்களுக்கிடையே பகையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி, அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவே நாடுகிறான். எனவே நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*