*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
நாள்: *31-10-24*
|| *கேள்வி 31* ||
[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *121-130* வரை)]
1. *ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியுடையவர்களுக்கு அல்லாஹ் கூறும் அறிவுரை என்ன?*
2. *சிறந்த/அழகிய வாழ்க்கை நெறி* உடையவர் யார்?
3. எந்த இறைவசனம் அருளப்பட்ட போது *முஸ்லிம்களுக்கு கடுமையான மனவேதனை* அளித்தது?
______________________________
1. *மனைவியரிடையே பாரபட்சம் காட்டக்கூடாது*
மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே *முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, இன்னொருத்தியை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்*! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (4:129)
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்.
மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது *நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள்*.
இதையறிந்த பிறகாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?
*எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்*” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயீ 3881)
___________________________
2. *நபி இப்ராஹீமின் (அலை) மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள்* (4:125)
___________________________
3. *தீமை செய்பவனுக்கு அதற்கான தண்டனை வழங்கப்படும்*” (4:123) எனும் வசனம் அருளப்பட்டபோது, அது முஸ்லிம்களுக்குக் கடும் கவலையை ஏற்படுத்தியது.
இந்த மன வேதனைக்கு அருமருந்தாக நபிகளாரின் உபதேசமும் அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *(நற்செயல்களில்) நடுநிலையாகச் செயல்படுங்கள்; சரியானதைச் செய்யுங்கள். ஏனெனில், கால் இடறி(க் காயமடைவது), அல்லது முள் தைப்பது உள்பட ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் அவருக்குப் பாவப் பரிகாரமாகவே அமையும்* என்று கூறினார்கள். முஸ்லிம் (5030)
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*