*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 24* ||
[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *51-60* வரை)]
1. *இறைநம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் இடும் கட்டளை* என்ன?
2. *நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களின் கூலி* என்ன?
3. அல்லாஹ், *இறைமறுப்பாளர்களை சபித்த காரணம்* என்ன?
_________________________
1) *அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளித்தல்*..
உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை ஒப்படைத்தவரிடம் திருப்பி செலுத்த வேண்டும், மேலும் மக்களிடத்தில் தீர்ப்பளிக்கும் போது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான் (04:58)
*அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிதல், அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழ்ப்படிதல், கருத்து வேறுபாடு கொண்ட விசயத்தில் அல்லாஹ்விடமும் தூதரிடமும் எடுத்துரைத்தல்*..
*இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்களில் அதிகாரமுடையோருக்கும் (கட்டுப்படுங்கள்!) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோராக இருந்தால் ஏதேனும் ஒரு விசயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளும்போது அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், அழகிய விளக்கமுமாகும். (4:59)
*அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள்* என்பதன் கருத்து நற்செயல்களில்தான் நபிகளார் கூறினார்கள் (புஹாரி 4340)
__________________________
2. *சொர்க்கமே கூலியாக வழங்கப்படும்*
இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை *சொர்க்கங்களில் நுழையச் செய்வோம்*. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய துணைவியரும் உள்ளனர். அடர்ந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம் (04:57)
__________________________
3. *சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) நிராகரிப்பவர்களைச் சுட்டிக் காண்பித்து உண்மை இறைநம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருப்பதாக* கூறிய காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்தான்
அவர்கள் சிலைகளையும் ஷைத்தானையும் நம்புகின்றனர். “இறைநம்பிக்கையாளர்களைவிட இவர்களே சரியான பாதையில் உள்ளவர்கள்” என இறைமறுப்பாளர்களைப் பற்றிக் கூறுகின்றனர். இவர்களையே அல்லாஹ் சபித்துவிட்டான். அல்லாஹ் யாரைச் சபித்து விட்டானோ அவனுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணவே மாட்டீர். (4:51-52)
__________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*