*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 16* ||
[ஆலு இம்ரான் (அத்தியாயம் *3* வசனங்கள் *171-180* வரை)]
1. *கஞ்சத்தனம்* & *ஜகாத் கொடுக்காதவர்களின்* மறுமை நிலை என்ன?
2. உஹுத் போரின் போது நபிகளாருக்கு காயம் ஏற்பட்ட பின் *முஷ்ரிக்குகள்* சென்றுவிட்டனர் அவர்கள் *மீண்டும் வராமல் இருக்க நபிகளார் செய்த யுக்தி என்ன?*
3. அல்லாஹ், தன்னை *நிராகரிப்பவர்களை உடனடியாக தண்டிக்காது விட்டு வைத்த காரணம்* என்ன?
4. *அனைத்து எதிரிகளும் ஒன்று திரண்டு அதிக படை பலத்துடன்* இறைநம்பிக்கையாளர்களை எதிர்த்த போது *அவர்கள் கூறியது என்ன?*
_________________________
1)கஞ்சத்தனம் செய்தார்களோ *அதன்மூலம் மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள்*
ஜகாத் – அவரது செல்வம் (தலை வழுக்கையான) *கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்குக் காட்சி தரும்.* அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (*அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக் கொண்டு, நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்*’ என்று கூறும். (நஸாயீ 2436)
————————–
2)அவர்களுக்குப் பின்னால் (அவர்களை *அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்? என்று கேட்டார்கள். (உஹுதில் கலந்து கொண்ட) நபித் தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க*) முன்வந்தனர் (புஹாரி 4077)
————————–
3) அவர்கள் *பாவத்தை அதிகரித்துக் கொள்வதற்காக* (3:178)
————————–
4) *அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்*(حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ) என்று கூறுவார்கள். (3:173) & (புஹாரி – 4563)*
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*