*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 08
||*இமாம் திர்மிதி*||
*முழுப்பெயர்:* முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)
*புனைப்பெயர்*: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்
*இயற்பெயர்*: முகம்மது
*தந்தைபெயர்*: ஈஸா
*பிறந்த ஊர்*: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.
*பிறப்பு*: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.
*கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:*
ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா, புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.
இவர் தொகுத்த *நூல்கள்:*
*ஜாமிவுத்திர்மீதி,*
அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),
ஷமாயில்,
அஸ்மாவுஸ் ஸஹாபா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),
அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),
கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.
இவரது *ஆசிரியர்கள்:*
முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
இவரது *மாணவர்கள்:*
அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும்.