*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 02

//*இமாம் தாரமீ//*

முழுப்பெயர்: *அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மான்* இப்னுல் ஃபலுல் இப்னு பஹ்ராமுத்தாரமீ அத்தைமீ (ஸுனன் அத்தாரமி என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

*புனைப்பெயர்*: அபுமுஹம்மதுல் ஸம்ரகன்தீ  அல்ஹாபிழ்

*இயற்ப்பெயர்*: அப்துல்லாஹ்

*தந்தை பெயர்*: அப்துர்ரஹ்மான்

*பிறந்த ஊர்* : ஸமரகன்த் என்ற ஊரில் பிறந்தார்.

*பிறந்தது* : ஹிஜ்ரி 181

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  ஈரானில் உள்ள குராஸான், இராக்கில் கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும்  பஸரா, ஷாம், வாஸித்,  திமிஷ்க், ஜஸீரா  போன்ற ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்

இவர் *தொகுத்த நூல்கள்:*

*சுனனுத்தாரமீ*

*தஃப்ஸீர்*

*அல்ஜாமிஃ*

*முஸ்னதுத் தாரமீ*

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

*இவரது ஆசிரியர்கள்:*

இப்ராஹீம் இப்னுல் முன்திர், கபீஸா இப்னு உக்பா, முஹம்மது இப்னு அஹ்மத் இப்னு  அபிகலஃப், முஹம்மது இப்னு குதாமா, காலித் இப்னு மக்லத், அஃப்வான் இப்னு முஸ்லிம், இஸ்மாயில் இப்னு அபிஅவ்ஸ், ஜஃபர் இப்னு அவ்ன், சுலைமான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு யஹ்யா அஸ்ஸகஃபி  போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

*இவரது மாணவர்கள்:*

*முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி*, அபூஸுர்ஆ, பகீ இப்னு மக்லதில் அன்த லூஸ், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அபூ யஃகூபில் வர்ராக்,  இப்ராஹீம் இப்னு அபிதாலிபின் நைஸாபூரி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

*இறப்பு*: இவர் ஹிஜ்ரி 255ல் மரணித்தார். அரஃபாவுடைய நாளில் (வெள்ளிக்கிழமை அன்று) அவர் அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 75 வயதாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *